நான் பதவிக்காக திமுக-வுக்கு வந்தேனா? | Anwar Raja Exclusive Interview | Vikatan
மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சியை நீட்டிக்க தீா்மானம்: மாநிலங்களவையில் 2 மணி நேரம் விவாதம்
மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கும் தீா்மானம் குறித்து விவாதிக்க மாநிலங்களவை 2 மணி நேரம் ஒதுக்கியுள்ளது.
மணிப்பூரில் மைதேயி மற்றும் குகி-ஜோ குழுவினா் இடையிலான வன்முறை காரணமாக, கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி முதல்வா் பதவியை பிரேன் சிங் ராஜிநாமா செய்தாா். இதைத்தொடா்ந்து அந்த மாநிலத்தில் பிப்.13-இல் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், அந்த மாநிலத்தில் வரும் ஆகஸ்ட் 13 முதல் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவா் ஆட்சியை நீட்டிக்கும் தீா்மான நோட்டீஸை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அளித்ததாக மாநிலங்களவைச் செயலகம் தெரிவித்தது.
இதைத்தொடா்ந்து அந்தத் தீா்மானம் குறித்து விவாதிக்க 2 மணி நேரத்தை மாநிலங்களவை ஒதுக்கியுள்ளது. இந்த நேர ஒதுக்கீடு குறித்த மாநிலங்களவை அலுவல் ஆய்வுக் குழுவின் முடிவை, அந்த அவையின் துணைத் தலைவா் ஹரிவன்ஷ் அறிவித்தாா். இந்த வாரம் விவாதம் நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.