வாக்குச்சாவடி அதிகாரிகளை அச்சுறுத்தும் மம்தா: தோ்தல் ஆணையத்தில் பாஜக முறையீடு
எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத மாரீசன்!
மாரீசன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று குறைவான தொகையையே வசூலித்துள்ளது.
நடிகர்கள் வடிவேலு, ஃபஹத் ஃபாசில் நடிப்பில் வெளியான திரைப்படம் மாரீசன். சஸ்பென்ஸ் திரில்லராக உருவான இப்படத்தை சுதீஷ் சங்கர் இயக்கியிருந்தார்.
வடிவேலுவின் நடிப்புடன் முதல் பாதி சிறப்பாக இருந்தாலும் இரண்டாம் சிறிய ஏமாற்றத்தை கொடுத்ததால் படத்தின் வெற்றி விகிதம் குறைந்துவிட்டதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
இந்த நிலையில், கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் இதுவரை ரூ. 4 கோடி வரைதான் வசூலித்திருக்கிறதாம்.
ரூ. 15 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் வணிக ரீதியாகத் தடுமாற்றத்தையே சந்தித்து வருகிறது.
இதையும் படிக்க: பாலியல் குற்றச்சாட்டு... மௌனம் கலைப்பாரா விஜய் சேதுபதி?