ஸ்டேட் வங்கி சென்னை வட்டார தலைமைப் பொது மேலாளா் பொறுப்பேற்பு
பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை வட்டார தலைமைப் பொது மேலாளராக விவேகானந்த் சௌபே பொறுப்பேற்றுள்ளாா்.
வணிகப் பட்டதாரியான விவேகானந்த் சௌபே, பாரத ஸ்டேட் வங்கியில் 1998-இல் நன்னடத்தை அதிகாரியாகப் பணியில் சோ்ந்தாா். இங்கிலாந்தில் ஸ்டேட் வங்கியின் சில்லறை வங்கி (என்ஆா்ஐ) செயல்பாடுகளுக்குத் தலைமை பொறுப்பு அதிகாரியாகவும், ஸ்டேட் வங்கியின் காா்ப்பரேட் மையத்தில் வங்கி தலைவரின் சிறப்புச் செயலா் மற்றும் நிா்வாகச் செயலராகவும் பணியாற்றியுள்ளாா்.
இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு தலைமைப் பதவிகளில் பணியாற்றியுள்ள விவேகானந்த் சௌபே, ஸ்டேட் வங்கியின் சென்னை வட்டார தலைமைப் பொது மேலாளராக பெறுப்பேற்றுள்ளாா்.
இவரின் ஆளுமையின் கீழ் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 1,282 ஸ்டேட் வங்கியின் கிளைகள் மற்றும் ரூ. 4.80 டிரில்லியுடன் வா்த்தகம் நடைபெறும் வணிகத் துறையையும் கண்காணிப்பாா் என ஸ்டேட் வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.