செய்திகள் :

பட்ஜெட் ராணி! நாயகியை பாராட்டி சின்னஞ்சிறு கிளியே தொடர் குழு பகிர்ந்த விடியோ!

post image

தொடரில் நாயகியின் முழு பாத்திரத்தை சின்னஞ்சிறு கிளியே குழுவினர் இரு வார்த்தைகளில் பகிர்ந்துள்ளனர். இதனுடன், தொடரில் நாயகியின் பாத்திரத்தை பிரதிபலிக்கும் வகையிலான புகைப்படங்களையும் குழுவினர் பகிர்ந்துள்ளனர்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு சின்னஞ்சிறு கிளியே தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் நாயகியாக ஸ்வாசிகாவும், நாயகனாக நரேஷும் நடிக்கின்றனர். இவர்கள் மட்டுமின்றி ரெளத்திரம் சையத், மதுமிதா, அபிதா, ஆறுமுக வேலு, காயத்ரி உள்ளிட்டப் பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பைக் டாக்ஸி ஓட்டுவது, உணவு விநியோகம் செய்வது, மாலை நேரங்களில் டியூஷன் எடுப்பது என பலவேலைகளைச் செய்து அதன்மூலம் பொருளீட்டி தனது குடும்பத்தை கவனித்துக்கொள்ளும் கதாநாயகிதான் ஸ்வாசிகா. இவர் இந்து என்ற பாத்திரத்தில் சின்னஞ்சிறு கிளியே தொடரில் நடித்து வருகிறார்.

குழுவினர் பகிர்ந்த விடியோவிலிரிந்து..

சூழல் காரணமாக கந்துவட்டியில் பணத்தை சம்பாதிக்கும் ஆணாதிக்கம் பிடித்த குடும்பத்தைச் சேர்ந்த நாயகனை திருமணம் செய்துகொண்டு, புகுந்த வீட்டில் அவர் சந்திக்கும் சவால்களே சின்னஞ்சிறு கிளியே தொடராக ஒளிபரப்பாகி வருகிறது. அதோடு, அந்த வீட்டில் ஏற்கெனவே மருமகள்களாக வந்த மேலும் சில பெண்களைப் பற்றியும் இத்தொடர் பேசுகிறது.

முழுக்க முழுக்க பெண்கள் மேம்பாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இத்தொடரில், நாயகி பணத்தை விரையம் செய்யாதவளாக காட்டப்படுகிறாள். இதனால், நாயகியை பட்ஜெட் ராணி என்ற பெயரில் குறிப்பிட்டு, சிறு விடியோவை இத்தொடரின் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சின்னஞ்சிறு கிளியே

அந்த விடியோவில் அவர் பைக் டாக்ஸி ஓட்டுவது, உணவு விநியோகம் செய்வது, எனப் பல வேலைகளைச் செய்வது போன்ற புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. நாயகியின் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் வகையில், வெளியிடப்பட்டுள்ள இந்த விடியோ ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிக்க | இனி, சனிக்கிழமையிலும் ஒளிபரப்பாகும் இரு தொடர்கள்!

Budget Queen! A video shared by the Chinnachinchiru Kileye serial team about the heroine!

குயிண்டன் டாரண்டினோ - டேவிட் ஃபிஞ்சர் கூட்டணியில் புதிய படம்!

இயக்குநர் டேவிட் ஃபிஞ்சர் தன் புதிய படத்தின் படப்பிடிப்பைத் துவங்கியுள்ளார். ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர்களான குயிண்டன் டாரண்டினோ மற்றும் டேவிட் ஃபிஞ்சர் இணைந்து புதிய படத்தை உருவாக்கத் திட்டமிட்டிருந... மேலும் பார்க்க

எதற்கும் துணிந்தவன் வசூலை வேறு எந்த சூர்யா படங்களும் தாண்டவில்லை: பாண்டிராஜ்

இயக்குநர் பாண்டிராஜின் கருத்து சூர்யா ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான தலைவன் தலைவி திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் வ... மேலும் பார்க்க

பாக்கியலட்சுமி தொடர் நிறைவு: முக்கிய தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

பாக்கியலட்சுமி தொடர் நிறைவடையவுள்ளதால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு பாக்கியலட்சுமி தொடர்... மேலும் பார்க்க

3 பிஎச்கே ஓடிடி தேதி!

சித்தார்த் நடிப்பில் வெளியான 3 பிஎச்கே திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சித்தார்த்தின் 40-வது படமாக உருவான 3பிஎச்கே திரைப்படத்தை இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கியிருந்தார். இதில் சரத்... மேலும் பார்க்க

ரசிகர்களுக்கு விருந்தா? கூலி கால அளவு அப்டேட்!

நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படத்தின் ரன்னிங் டைம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் ... மேலும் பார்க்க

நேரடியாகத் திரையரங்குகளில் வெளியாகும் சிம்பு - 49 புரமோ?

நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றி மாறன் படத்தின் புரமோ குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.இயக்குநர் வெற்றி மாறன் வடசென்னை படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்... மேலும் பார்க்க