Cheese: இதயம், எலும்புகளை பாதுகாக்கும்; புற்றுநோய் தடுக்கும்! யார், எவ்வளவு சாப்...
3 பிஎச்கே ஓடிடி தேதி!
சித்தார்த் நடிப்பில் வெளியான 3 பிஎச்கே திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சித்தார்த்தின் 40-வது படமாக உருவான 3பிஎச்கே திரைப்படத்தை இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கியிருந்தார்.
இதில் சரத் குமார், தேவயானி, மீதா ரகுநாத் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். சொந்த வீட்டை வாங்க ஒரு நடுத்தர குடும்பம் எவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்பதைப் படம் பதிவுசெய்திருந்தது.
ஆனால், சொந்த வீட்டை வாழ்க்கையின் வெற்றியாகவும் கனவாகவும் மட்டுமே பார்த்த இப்படம் திரைக்கதையால் சுமாரான படமாக எஞ்சியது.
திரையரங்குகளிலும் பெரிய வசூலைப் பெறவில்லை. இந்த நிலையில், இப்படம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி சிம்பிளி சௌத் (இந்தியாவைத் தவிர்த்து வெளிநாடுகளில்) ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நாளில் அமேசான் பிரைம் தளத்தில் இந்தியாவிற்குள் இப்படம் வெளியாகலாம் என்றும் தெரிகிறது.
இதையும் படிக்க: ரசிகர்களுக்கு விருந்தா? கூலி கால அளவு அப்டேட்!