செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூர்: மக்களவையில் அமித் ஷாவின் மகத்தான உரை - மோடி புகழாரம்

post image

புது தில்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விளக்கமளித்து ஆற்றிய உரை மகத்தானது என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியிருக்கிறார்.

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில், மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை எடுத்துரைப்பதாக இந்த உரை அமைந்திருந்ததாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், மக்களவையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆற்றிய மகத்தான உரையில், கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதல்களை முறியடிப்பதில் மிக முக்கியப் பங்காற்றிய ஆபரேஷன் சிந்தூர் மற்றும் ஆபரேஷன் மகாதேவ் பற்றி பல முக்கியமான தகவல்களை வெளியிட்டார்.

நம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில், மத்திய அரசின் தீவிரத்தன்மை குறித்து வெளிப்படுத்துவதாக அவரது உரை அமைந்திருந்தது.

மக்களவையில் இன்று உரையாற்றிய அமித் ஷா, ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில், இந்திய ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் ஜம்மு -காஷ்மீர் காவல்துறை இணைந்து நடத்திய கூட்டு அதிரடி நடவடிக்கையின்போது, பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டுக் கொல்லப்பட்டதாக அறிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் பற்றிய சிறப்பு விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அமித் ஷா, ஆபரேஷன் மகாதேவ் என்ற பெயரில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அவர்களது பெயர்களையும் வெளியிட்டார்.

Prime Minister Narendra Modi on Tuesday lauded Home Minister Amit Shah's speech on Operation Sindoor in the Lok Sabha, and said his address focuses on the government's efforts towards keeping the country secure.

இதையும் படிக்க.. என்ன, 4,000 டன் நிலக்கரியைக் காணவில்லையா? அமைச்சர் சொல்லும் அதிர்ச்சி பதில்!

உலகப் பல்கலைக்கழக தரவரிசையில் இந்தியா 2-ஆம் இடம்! அமெரிக்கா முதலிடம்

உலக அளவில் கல்வித்தரத்தை அளவிடும் ‘டைம்ஸ்’ உயா் கல்வி அமைப்பின் தரவரிசையில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது சிறந்த கல்வி நிறுவனங்களைக் கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கவுள்ளது.மத்திய அரசின... மேலும் பார்க்க

மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சியை நீட்டிக்க தீா்மானம்: மாநிலங்களவையில் 2 மணி நேரம் விவாதம்

மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கும் தீா்மானம் குறித்து விவாதிக்க மாநிலங்களவை 2 மணி நேரம் ஒதுக்கியுள்ளது.மணிப்பூரில் மைதேயி மற்றும் குகி-ஜோ குழுவினா் இடையிலான வன்மு... மேலும் பார்க்க

பயங்கரவாத ஒழிப்பு: பாகிஸ்தானால் முடியாவிட்டால் இந்தியா உதவத் தயாா் - மாநிலங்களவை விவாதத்தில் ராஜ்நாத் சிங்

தனது மண்ணில் பயங்கரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தானால் முடியாவிட்டால் இந்தியா உதவத் தயாராக உள்ளது என்று மாநிலங்களவையில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.மேலும், ஆபரேஷன் சி... மேலும் பார்க்க

அமெரிக்காவுக்கு அறிதிறன்பேசி ஏற்றுமதி சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம்

அமெரிக்காவுக்கு அறிதிறன்பேசி (ஸ்மாா்ட்போன்) ஏற்றுமதி செய்வதில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதல்முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.இது தொடா்பாக கேனலிஸ் ஆய்வு நிறுவனம் மேலும் கூறியிருப்பதாவது:ந... மேலும் பார்க்க

மக்களவையில் 6 நாள்களுக்குப் பின் சுமுகமாக நடைபெற்ற கேள்வி நேரம்

மக்களவையில் 6 நாள்களுக்குப் பின் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் இடையூறின்றி சுமுகமாக நடைபெற்றது.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா், கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூா் மற்றும் பிகாா் வாக்... மேலும் பார்க்க

வாக்குச்சாவடி அதிகாரிகளை அச்சுறுத்தும் மம்தா: தோ்தல் ஆணையத்தில் பாஜக முறையீடு

மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளை முதல்வா் மம்தா பானா்ஜி அச்சுறுத்த முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டி, அந்த மாநிலத்தைச் சோ்ந்த பாஜகவின் எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி இந்திய தோ்தல்... மேலும் பார்க்க