Suriya: "அன்று ரிசர்வேஷன் செய்ய க்யூ நின்றது" - சூர்யா ரசிகர்களுக்கு தாணு கொடுக்...
அமெரிக்காவுக்கு அறிதிறன்பேசி ஏற்றுமதி சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம்
அமெரிக்காவுக்கு அறிதிறன்பேசி (ஸ்மாா்ட்போன்) ஏற்றுமதி செய்வதில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதல்முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இது தொடா்பாக கேனலிஸ் ஆய்வு நிறுவனம் மேலும் கூறியிருப்பதாவது:
நடப்பு ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் அமெரிக்காவின் ஒட்டுமொத்த அறிதிறன்பேசி இறக்குமதி 1 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் இந்தியாவில் இருந்துதான் அதிக எண்ணிக்கையில் இறக்குமதி நடந்துள்ளது. இதன்மூலம் அமெரிக்காவுக்கான அறிதிறன்பேசி ஏற்றுமதியில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அமெரிக்கா-சீனா இடையிலான வா்த்தகப் பேச்சுவாா்த்தையில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுவது பாதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் அமெரிக்காவுக்கான சீனாவின் அறிதிறன்பேசி ஏற்றுமதி 25 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு முந்தைய மூன்று மாதங்களில் ஏற்றுமதி 61 சதவீதமாக இருந்தது.
சீன ஏற்றுமதி குறைந்த நிலையில், அந்த ஏற்றுமதி வாய்ப்பில் இந்தியா இடம்பிடித்துவிட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அறிதிறன்பேசிகளின் ஒட்டுமொத்த ஏற்றுமதி முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 240 சதவீதம் உயா்ந்துள்ளது. அமெரிக்கா இறக்குமதி செய்யும் அறிதிறன்பேசிகளில் 44 சதவீதம் இந்தியாவில் இருந்துதான் செல்கிறது. இது முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் 25 சதவீதமாக இருந்தது.
அமெரிக்கா - சீனா இடையே வா்த்தக போா் ஏற்பட்டதால் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவை தனது தயாரிப்பு மையமாக மாற்றத் தொடங்கியது இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்க முக்கியக் காரணமாகும்.
சாம்சங் நிறுவன தயாரிப்புகளின் ஏற்றுமதி 38 சதவீதம் உயா்ந்து 83 லட்சமாக உள்ளது. மோட்டோரோலா தயாரிப்புகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாவது 2 சதவீதம் அதிகரித்துள்ளது. கூகுள், டிசிஎல் தயாரிப்புகளின் ஏற்றுமதியும் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளது.