ஒரே நேரத்தில் நிலவும் சூரியனும்... சீரியல் நடிகை ஷோபனா பகிர்ந்த விடியோ!
ஒரே நேரத்தில் நிலவும் சூரியனும் இருக்கும்படியான விடியோவை நடிகை ஷோபனா பகிர்ந்துள்ளார்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள டிஸ்னிலேன்ட் கேளிக்கை பூங்காவிற்குச் செல்வதற்கு முன்பு ஷோபனா வெளியிட்டுள்ள விடியோவில், பின்புறம் நிலவும், முன்புறம் சூரியனும் இருக்கும்படியான செல்ஃபி விடியோவை பகிர்ந்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் பூங்காற்று திரும்புமா? என்ற தொடரில் நாயகியாக நடிப்பவர் நடிகை ஷோபனா. விஜய் தொலைக்காட்சியின் முத்தழகு தொடரில் நடித்ததன் மூலம் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, பூங்காற்று திரும்புமா தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.
இதேபோன்று, கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு மீனாட்சி சுந்தரம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதிலும், ஷோபனா நாயகியாக நடித்து வருகிறார். இந்த இரு தொடர்களும் ஒரே நாளில் இருந்து ஒளிபரப்பாகி வருகின்றன.
ஒரே நேரத்தில் இரு தொடர்களில் நாயகியாக நடித்துவரும் நடிகை என்ற பெருமையைப் பெற்றுள்ளார் நடிகை ஷோபனா. இரு தொடர்களில் நடித்து வந்தாலும், நேரம் கிடைக்கும்போதெல்லாம், பயணங்கள் மேற்கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் ஷோபனா.
அதனால், தற்போது தனது சிறு வயது கனவான டிஸ்னிலேன்ட் கேளிக்கை பூங்காவிற்குச் செல்ல வேண்டும் என்ற கனவை நனவாக்கியுள்ளார். இது அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ளது.

இந்தப் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பு, விமான நிலையத்தில் இருந்தவாறு விடியோ ஒன்றை ஷோபனா பகிர்ந்துள்ளார். அதில், அவர் பதிவிட்டுள்ளதாவது,
என் பின்புறம் நிலவு இருப்பதை யாராவது கவனித்தீற்களா? அதேவேளையில் முன்புறம் சூரியன் என்னை முத்தமிட்டுக்கொண்டு இருக்கிறது. இந்த அழகான தருணத்தின் அனுபவம் ஒரு கனவைப் போன்றது எனப் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவுக்கு ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிக்க | பட்ஜெட் ராணி! நாயகியை பாராட்டி சின்னஞ்சிறு கிளியே தொடர் குழு பகிர்ந்த விடியோ!