வாக்குச்சாவடி அதிகாரிகளை அச்சுறுத்தும் மம்தா: தோ்தல் ஆணையத்தில் பாஜக முறையீடு
பள்ளிக் காலாண்டு, அரையாண்டுத் தேர்வு அட்டவணைகள் வெளியீடு! பொதுத் தேர்வு எப்போது?
சென்னை: தமிழகத்தில் அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வு அட்டவணைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று வெளியிட்டார்.
தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வு அட்டவணைகள் இன்று வெளியாகியிருக்கின்றன.
அதன்படி, காலாண்டுத் தேர்வு செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடபெறவிருக்கிறது. செப். 27ஆம் தேதி முதல் காலாண்டு விடுமுறை தொடங்கும்.
அதுபோல, டிசம்பர் 15 முதல் 23 ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறும் என்றும், டிச 24 முதல் அரையாண்டு விடுமுறை தொடங்கும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 2025 - 26ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்வு அட்டவணை அக்டோபரில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனையின்படி, கடந்தாண்டு போலவே 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும்.
இத்துடன் பள்ளிக் கல்வித்துறையின்(2025-2026) நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள காலாண்டு/அரையாண்டுத் தேர்வுக்கான தேதிகள் அடங்கிய பக்கங்களை இணைத்துள்ளோம். மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தன்னம்பிக்கையோடு தயார் ஆகுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.