2025-ல் மட்டும் நிலுவையிலுள்ள நுகர்வோர் வழக்குகள் எண்ணிக்கை 12,000!
கோகோயின் உரை.. பாகிஸ்தானின் சார்பாகச் செயல்படுவதை நிரூபிக்கிறது: அஸ்ஸாம் முதல்வர்
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி கோகோயின் உரை அவர் பாகிஸ்தானின் சார்பாகச் செயல்படுவதை நிருப்பித்துள்ளதாக அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோயின் நாடாளுமன்ற உரை, அவர் பாகிஸ்தானின் சார்பாக செயல்படுவதைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது.
கோகோயின் மனைவி, இரண்டு குழந்தைகளும் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றிருப்பதால், அவர் எந்த நேரத்திலும் இந்தியாவை விட்டு வெளியேறலாம் என்று சர்மா குற்றம் சாட்டினார்.
அவரால் அஸ்ஸாமுக்கு அவமானம், இந்தியர்கள் என்ற பெருமைக்குத் துரோகம் செய்தவர் அவர் என்று கூறினார்.
திங்களன்று நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தின் போது, ஏப்ரல் 22 பஹல்காம் தாக்குதல் குறித்த அடிப்படை கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தவறிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை கோகோய் விமர்சித்தார்.
உள்நாட்டு பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து அரசு மௌனம் காத்து வருவதையும், 26 பேர் உயிரிழந்த பஹல்காம் தாக்குதலின் அடிப்படை மூலத்தையும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
கோகோயின் மனைவி எலிசபெத் கோல்பர்னுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி, முதல்வர் ஹிமாந்தா கோகோயை பல மாதங்களாகத் தாக்கி வருகிறார்.