தெரு நாய்கள் தாக்கி ஒருவா் இறந்த சம்பவம்: டிடிஏவுக்கு தில்லி காவல்துறை கடிதம்
இந்திரா காந்தியின் துணிச்சல் மோடிக்கு இல்லையா? -மக்களவையில் அனல் பறக்க விவாதம்
இந்திரா காந்தியின் துணிச்சல் மோடிக்கு இல்லையா? என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியிருப்பது தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது.
ராகுல் காந்தி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளில் பிரதமர் மோடியில் செயல்திறன் திருப்தியாக இல்லாததைச் சுட்டிக்காட்டி மக்களவையில் செவ்வாய்க்கிழமை(ஜூலை 29) பேசியவை:
“ஆபரேஷன் சிந்தூர் ஆரம்பமாவதற்கு முன்னரே, எதிர்க்கட்சிகள் அரசுக்கு பாறை போல உறுதுணையாக நிற்பதை தெளிவுபடுத்திவிட்டன.
ராணுவத்தை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அந்த விதத்தில் பயன்படுத்த துணிச்சல் இல்லாத ஒரு பிரதமரை நம்மால் ஏற்றுக்கொள்ளவே முடியாது”.
“பிரதமர் மோடிக்கு இந்திரா காந்தியின் துணிச்சல் இருந்தால், மக்களவையில் அவர் ‘டிரம்ப் பொய் சொல்பவர்’ ’டிரம்ப் ஒரு பொய்யர்’ என்று நிராகரித்து பேசியிருக்க வேண்டும். இந்திய போர் விமானங்களில் ஒன்றைக்கூட சண்டையில் இழக்கப்படவில்லை என்றும் சொல்லியிருக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “அமெரிக்க கடற்படையின் அச்சுறத்தலை புறந்தள்ளி அப்போதைய பிரதமர் வங்கதேச போரை நடத்தினார். இந்திய ராணுவத்தை சரியாகக் கையாளும் திறன் 1971ல் இருந்தது. வங்கதேசப் போரில் ஒரு லட்சம் பாகிஸ்தான் வீரர்கள் சரணடைந்தனர். புதிய நாடு உருவானது. போரை நடத்தி இந்திரா காந்தி வலிமையோடு செயல்பட்டார். இந்திய ராணுவத்தை பயன்படுத்த விரும்பினால், 100 சதவீதம் முழுமையாகப் பயன்படுத்துங்கள். முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும். கட்டுப்படுத்தக் கூடாது” என்றார்.