இணையவழி விளையாட்டுக் கலை உருவாக்கம்: கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்
யாரும் தாக்குதலை நிறுத்தச் சொல்லவில்லை; பாகிஸ்தான்தான் கதறியது: பிரதமர் மோடி
இந்தியா - பாகிஸ்தான் மோதலின்போது வெறும் 3 நாடுகள் மட்டுமே பாகிஸ்தானை ஆதரித்தன், 190 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தன. ஆனால், காங்கிரஸ் கட்சியின் ஆதரவு மட்டும் கிடைக்கவில்லை என மக்களவையில் பிரதமர் மோடி பேசினார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் இன்று நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பங்கேற்றுப் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.
அப்போது அவர் கூறுகையில், ஐ.ந. உள்பட பல உலக நாடுகளில் இந்தியாவின் நடவடிக்கைக்கு ஆதரவு கிடைத்தது. பாகிஸ்தானுக்கு ஒட்டுமொத்த உலக நாடுகள் 193ல், சீனா, துருக்கி என வெறும் 3 நாடுகளின் ஆதரவுதான் கிடைத்தது. ஆனால், இந்தியாவுக்கு 190 நாடுகளின் ஆதரவு கிடைத்தது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை மண்டியிட வைத்துவிட்டோம். இந்த தாக்குதலை பாகிஸ்தான் பல ஆண்டுகளுக்கு மறக்க முடியாது.
இந்திய ராணுவம், ஆபரேஷன் சிந்தூரில் 100 சதவீத இலக்கை எட்டியது. ஆனால், மோடி தோற்றுவிட்டார் எனக் கூறி காங்கிரஸ் மகிழ்ச்சி அடைந்தது. எதிர்க்கட்சி அனைவரும் என்னையே குறி வைத்துத் தாக்குகிறார்கள். என்னை தாக்குவதில் குறியாக உள்ளனர். தேசத்தின் சக்தியை குறைத்து மதிப்பிட்டனர்.
இந்தியா மீதும், ராணுவ வலிமை மீதும் எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லை. இந்தியாவுக்கு உலகின் மொத்த ஆதரவும் கிடைத்தது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு மட்டும் கிடைக்கவில்லை.
பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோரை இந்தியா நிச்சயம் தாக்கும் என்பது தற்போது நிரூபிக்கப்பட்ட உண்மையாக உள்ளது.
எதிர்க்கட்சிகள் சொல்லும் கருத்துகள் பலவும், இந்திய எல்லையைத் தாண்டி வெளியே இருந்து வருவது போல ஒத்திருக்கிறது. ஒரே இரவில் பாகிஸ்தானுக்கே சென்று இந்திய வீரர்கள் தாக்குதல் நடத்திவிட்டுத் திரும்பினர்.
ஆனால், எங்கே சென்றது 56 இன்ச் நெஞ்சு என்று காங்கிரஸ் கட்சியினர் நையாண்டி செய்கிறார்கள். எப்போதுமே மக்கள் மனங்களை காங்கிரஸால் வெல்ல முடியாது. எப்போதுமே ஆபரேஷன் சிந்தூரின் இலக்குகள் தெளிவாக இருந்தன.
பாகிஸ்தான் விமான தளங்களில் கடும் பாதிப்பை உருவாக்கியது இந்திய பாதுகாப்புப் படை. இந்தியாவின் தற்சார்பு தொழில்நுட்பங்கள் சிறப்பாக செயல்பட்டன. பயங்கரவாதிகளையும் அதை ஆதரிக்கும் நாடுகளையும் பிரித்துப்பார்க்க முடியாது என்று கூறினார் பிரதமர் மோடி.