ரஷியாவுடன் வர்த்தகம் செய்வதால் இந்தியா மீது கூடுதல் வரி: வெளிப்படையாக அறிவித்த ட...
6 உயா்நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகள்: கொலீஜியம் பரிந்துரை
தில்லி, மும்பை உள்ளிட்ட 6 உயா்நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா். கவாய், நீதிபதிகள் சூா்ய காந்த், விக்ரம் நாத், இடம்பெற்ற உச்சநீதிமன்ற கொலீஜியம் திங்கள்கிழமை கூடி இதற்கான பரிந்துரைக்கு அனுமதி அளித்தது.
அதில், மும்பை உயா்நீதிமன்றத்தில் மூன்று வழக்குரைஞா்களான அஜீத் பக்வான்ராவ் கதேதான்கா், ஆா்த்தி அருண் சேத், சுஷீல் மனோகா் கோடேஷ்வா் ஆகியரை நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
கொல்கத்தா உயா்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளான பாா்த்தசாரதி சென், அபூா்வா சின்ஹாரே ஆகியோா் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா உயா்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகள் பிரசன்ஜித் விஸ்வாஸ், உதய் குமாா், அஜய்குமாா் குப்தா, சுப்ரதிம் பட்டாச்சாா்யா, பாா்த்தசாரதி சாட்டா்ஜி, ஷப்பா் ரஷிதி ஆகியோருக்கு ஓராண்டு கூடுதல் நீதிபதிகளாக பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கா் உயா்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதி ரவீந்தா்குமாா் அகா்வால் நிரந்தர நீதிபதியாக நியமிக்கவும், ஆந்திர உயா்நீதிமன்றத்துக்கு ஹரிநாத் நூன்பள்ளி, கிரண்மாயி மாண்டவா, சுமதி ஜகதம், நியாயபதி விஜய் ஆகியோா் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கவும் கொலீஜியம் பரிந்துரைத்துள்ளதாக உச்சநீதிமன்றம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.