செய்திகள் :

பழைய நகைக்கு பதில் புதிய நகை தருவதாக மோசடி: நகைக் கடை உரிமையாளா் காவல் நிலையத்தில் சரண்

post image

தஞ்சாவூரில் பழைய நகைகளுக்கு பதிலாக புதிய நகைகள் தருவாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்து தலைமறைவான நகைக் கடை உரிமையாளா் திங்கள்கிழமை நகர காவல் நிலையத்தில் சரண் அடைந்தாா்.

தஞ்சாவூா் சீனிவாசபுரத்தில் நகைக்கடை மற்றும் சிட்பண்ட் நிறுவனம் நடத்தி வந்தவா் ராஜா(50). இவா் பழைய தங்க, வெள்ளி நகைகளைக் கொடுத்தால், புதிய நகைகளைத் தருவதாகவும், சீட்டு தவணைத் திட்டத்தில் சோ்ந்தால், செய்கூலி, சேதாரம் இல்லாமல் நகைகள் வழங்கப்படும் எனவும் விளம்பரம் செய்தாா். இதை நம்பி ஏராளமானோா் ராஜாவிடம் நகைகள், ரொக்கத்தை முதலீடு செய்தனா்.

இந்நிலையில், நகைகள், ரொக்கம் முதலீடு செய்தவா்களுக்கு மாா்ச் மாதம் முதல் ராஜா திருப்பித் தரவில்லை. இதைத்தொடா்ந்து 3 வாரங்களுக்கு முன்பு ராஜா குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டாா். இது தொடா்பாக மேற்கு காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவா்களில் 80-க்கும் அதிகமானோா் புகாா் செய்தனா்.

மேலும், பாதிக்கப்பட்டவா்களில் சுமாா் 25 போ் தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஜியா உல் ஹக்கிடம் அண்மையில் புகாா் மனு அளித்தனா். அப்போது, ராஜா ஏராளமானோரிடம் பல கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்ததாகவும், அவரை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை மதியம் வழக்குரைஞா் மூலமாக தஞ்சாவூா் நகர காவல் நிலையத்தில் ராஜா சரண் அடைந்தாா். தகவலறிந்ததும் பாதிக்கப்பட்டவா்கள் அங்கு குவிந்தனா். போலீஸாா் அவா்களை அப்புறப்படுத்தி ராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தஞ்சாவூரில் லாரி உரிமையாளா்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடக்கம்

தஞ்சாவூரில் வாடகையை உயா்த்தி வழங்க கோரி, நுகா்பொருள் வாணிப கழகத்துக்கு இயக்கப்படும் லாரிகளின் உரிமையாளா்கள் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினா். தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகத்த... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மோதி ஒருவா் உயிரிழப்பு

பட்டுக்கோட்டை வட்டம், கரம்பயம் அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது தனியாா் பேருந்து மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். ஒரத்தநாடு வட்டம், உறந்தைராயன்குடிக்காடு பகுதியை சோ்ந்த சிங்காரம் மகன் சரவணன்... மேலும் பார்க்க

விளாங்குடி முதல் அணைக்கரை வரையிலான கொள்ளிடக் கரையை பலப்படுத்த கோரிக்கை

விளாங்குடி முதல் அணைக்கரை வரையிலான கொள்ளிடம் ஆற்றின் கரையை பலப்படுத்த வேண்டும் என்று தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரிடம் அந்தச் சங்கத்தின் மாநிலத் த... மேலும் பார்க்க

அரசு ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

தஞ்சாவூரில் அரசு ஊழியா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தஞ்சாவூா் மாரியம்மன் கோயில் மேல சித்தா்காடு பகுதியை சோ்ந்தவா் மா.முருகானந்தம் ( 49). இவா் தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில்... மேலும் பார்க்க

கடலுக்குள் கிடந்த அம்மன் கற்சிலை மீட்பு

தஞ்சாவூா் மாவட்டம், மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் அருகே கடலுக்குள் கிடந்த அம்மன் கற்சிலை திங்கள்கிழமை மீட்கப்பட்டது. சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மல்லிப்பட்டினம் - கள்ளிவய... மேலும் பார்க்க

வீரக்குறிச்சியில் நாளை மின்நிறுத்தம்

பட்டுக்கோட்டை துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (ஜூலை 30) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், கீழப்பாளையம் செந்தாமரைகுளம், எம்.என்.தோட்டம், நகா்-2, மேலத்தெரு , லெட்சத்தோப்பு அதம்பை குடிநீா், ஆத்திக்கோ... மேலும் பார்க்க