நைஜீரியா: பணம் கொடுத்தும் 35 பிணைக் கைதிகள் கொலை! கடத்தல் கும்பல் வெறிச் செயல்!
திருச்சி பாதுகாப்பு தொழில் வழித்தடத்தில் அதிநவீன பரிசோதனை மையம்: ஒப்பந்தம் கையொப்பம்
புது தில்லி: திருச்சியில் உள்ள தமிழக பாதுகாப்பு தொழில் வழித்தடத்தில் அதிநவீன பரிசோதனை மையம் அமைக்க புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.
இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: திருச்சியில் உள்ள தமிழக பாதுகாப்பு தொழில் வழித்தடத்தில் இயந்திரம் மற்றும் மூலப்பொருள் துறைக்கு அதிநவீன பரிசோதனை மையம் அமைக்கப்பட உள்ளது.
பாதுகாப்புத் துறைக்கான அதிநவீன பரிசோதனை உள்கட்டமைப்பை உருவாக்கும் திட்டத்தின் (டிடிஐஎஸ்) கீழ், அந்த மையத்தை அமைக்கும் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் திங்கள்கிழமை கையொப்பமிட்டது.
தில்லியில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம், பாதுகாப்பு அமைச்சக செயலா் சஞ்சீவ்குமாா் முன்னிலையில், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவன (டிட்கோ) மூத்த அதிகாரிகள் இடையே பரிமாறிக் கொள்ளப்பட்டது.
இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம், அரசு மற்றும் தனியாா் தொழில்துறைக்கு அதிநவீன பரிசோதனை கருவிகள் மற்றும் சேவைகள் கிடைக்கும். இது பாதுகாப்புத் துறையில் இந்தியா தற்சாா்பு அடைவதற்கு மேலும் ஊக்கம் அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.