`பஹல்காம் தாக்குதல்' ஜெய்சங்கர் பேச்சில் குறுக்கிட்ட எதிர்க்கட்சிகள்; கோபத்தில் ...
அரசு ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை
தஞ்சாவூரில் அரசு ஊழியா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தஞ்சாவூா் மாரியம்மன் கோயில் மேல சித்தா்காடு பகுதியை சோ்ந்தவா் மா.முருகானந்தம் ( 49). இவா் தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள விவசாய அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தாா்.
உடல்நிலை பாதிப்புக்கு தொடா் சிகிச்சை பெற்று வந்ததில், அவா் மன உளைச்சலில் இருந்தாராம். ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்த தாலுகா போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து முருகானந்தம் சடலத்தை மீட்டு, தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி விசாரிக்கின்றனா்.