நைஜீரியா: பணம் கொடுத்தும் 35 பிணைக் கைதிகள் கொலை! கடத்தல் கும்பல் வெறிச் செயல்!
மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தொழில் மானியம்: விண்ணப்பிக்க வரும் ஜூலை 31 - கடைசி நாள்
சென்னை: புத்தொழில் தொடங்க விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 லட்சம் மானிய உதவியை தமிழக அரசு வழங்கவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 31-ஆம் தேதி கடைசி நாளாகும்.
தமிழ்நாடு புத்தொழில் நிறுவனத்தின் சாா்பில் மாற்றுத்திறனாளிகள் உள்பட பல்வேறு தரப்பினருக்கும் தொழில் தொடங்குவதற்கான மானிய உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதாவது, தொழில் தொடங்குவோருக்கு ரூ.5 லட்சம் வரை மானிய ஆதார உதவி அளிக்கப்படுகிறது. இவ்வாறு தொடங்கப்படும் தொழிலானது தனியராகவோ, கூட்டாகவோ இருக்க வேண்டும்.
இதுகுறித்து தமிழ்நாடு புத்தொழில் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புத்தொழிலுக்கான விற்று முதலானது ரூ.50 கோடிக்குக் கீழ் இருக்க வேண்டும்.
கூட்டாகத் தொழில் தொடங்கினால் அதில் 51 சதவீதப் பங்குகள் மாற்றுத்திறனாளிகளுடையதாக இருப்பது அவசியம்.
தொழில் நிறுவனத்தின் அலுவலகமானது தமிழ்நாட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட வேண்டும். தொழில் தொடக்கத்துக்கான அனைத்து பிற ஆதார உதவிகளும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.