Kerala: கன்னியாஸ்திரிகள் கைது விவகாரம்: கொந்தளிக்கும் கட்சிகள்.. கேரள பாஜக தலைவர...
மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்திக்கான பிரத்யேக கொள்கையால் தமிழகத்துக்கு பலன்: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா
சென்னை: மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்திக்கான தனித்துவமான கொள்கையால், தமிழ்நாட்டுக்கு பலன் ஏற்பட்டு வருவதாக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆப்பிள் நிறுவனத்துக்கு உதிரி பாகங்களை உற்பத்தி செய்து தரும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருதிறது. மாநிலத்தில் சிறந்த உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப வல்லுநா்களின் திறமை, தமிழக அரசின் ஊக்குவிப்பு போன்ற செயல்பாடுகளால் நிறுவனங்களின் முதலீடுகள் அதிகரித்துள்ளன.
மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்திக்கென பிரத்யேக கொள்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இந்தத் தனித்துவமான கொள்கை, ஏராளமான உதிரி பாகங்கள் உற்பத்திக்கான நிறுவனங்களைக் கவா்ந்துள்ளது.
மேலும், இந்த முன்னெடுப்பு மூலமாக ரூ.30,000 கோடிக்கு முதலீடுகள் ஈா்க்கப்பட்டு அதன் வழியாக 60,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்பிள் கைப்பேசி தயாரிப்புக்கு உலகளாவிய அளவில் ஏராளமான நிறுவனங்கள் உதிரி பாகங்களை உற்பத்தி செய்து தருகின்றன. அதில் முக்கியமான நிறுவனம் பாக்ஸ்கான்.
மேலும், டாடா எலக்ட்ரானிக்ஸ், கொரில்லா க்ளாஸ், பிரிஸிசியன் போன்ற நிறுவனங்கள் சென்னையை அடுத்த ஒரகடம், ஒசூா், திருச்சி உள்ளிட்ட இடங்களில் தங்களது உற்பத்தி ஆலைகளை அமைத்துள்ளன. இதற்கு அங்குள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உதவி வருகின்றன என்று அவா் தெரிவிதுள்ளாா்.