2025-ல் மட்டும் நிலுவையிலுள்ள நுகர்வோர் வழக்குகள் எண்ணிக்கை 12,000!
மலையாளத்தில் அறிமுகமாகும் கதிர்!
நடிகர் கதிர் புதிய படத்தால் மலையாள சினிமாவில் அறிமுகமாகிறார்.
மதயானைக் கூட்டம், பரியேறும் பெருமாள் படங்களின் மூலம் நாயகனாக கவனிக்கப்பட்டவர் நடிகர் கதிர். சில மாதங்களுக்கு முன் வெளியான சுழல் - 2 இணையத் தொடரிலும் நல்ல நடிப்பை வழங்கியிருந்தார்.
தற்போது, சில படங்களில் நாயகனாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், மீசா என்கிற மலையாளப் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் மூலம் மலையாள சினிமாவுக்கும் அறிமுகமாகிறார்.

எம்சி ஜோசஃப் இயக்கிய இப்படத்தில் டைம் ஷாம் சாக்கோ, ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். மீஷா வருகிற ஆக. 1 ஆம் தேதி வெளியாகிறது.
இதையும் படிக்க: துல்கர் சல்மானின் ஆகாசம்லோ ஒக தாரா கிளிம்ஸ்!