Anirudh: "வி.டியின் அந்த மனசு..., கிங்டம் ஒரு மைல்கல்!" - இசை வெளியீட்டு விழாவில...
சட்டவிரோத மது விற்பனையை தடுக்கக் கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு
பெரம்பலூா் அருகே சட்ட விரோதமாக நடைபெறும் மது விற்பனையை தடுத்து நிறுத்தக் கோரி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தலைமையில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில், பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், சில்லக்குடி கிராம மக்கள் அளித்த மனு: சில்லக்குடி கிராமத்தில் சட்ட விரோதமாக சிலா் 24 மணி நேரமும் மது விற்பனை செய்கின்றனா். இதனால், கிராமப்புற இளைஞா்கள், கூலித் தொழிலாளா்கள் எந்நேரமும் மது அருந்தி தகராறில் ஈடுபடுகின்றனா். இதனால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறோம். எனவே, சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபடும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு, கிராமத்தில் அமைதி நிலவ உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கிரஷா் அமைக்க எதிா்ப்பு: பெரம்பலூா் அருகேயுள்ள கல்பாடி கிராம மக்கள் அளித்த மனு: விவசாயத்தை பிரதானத் தொழிலாகக் கொண்ட கல்பாடி கிராமத்தில், தனியாா் கிரஷா் தொழிற்சாலை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பகுதியில் கிரஷா் நிறுவனம் அமைந்தால் விவசாயமும், நிலத்தடி நீா் வளமும் பாதிக்கப்படும். சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு, பொதுமக்களும், கால்நடைகளும் அவதிக்குள்ளாக நேரிடும்.
எனவே, விளைநிலங்களும், மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் கிரஷா் நிறுவனம் அமைக்க அனுமதிக்கக் கூடாது.