மாநிலப் பல்கலை.களில் அதிகாரம் யாருக்கு? வழக்கு தொடர மேற்கு வங்க ஆளுநா் முடிவு!
பிரதமா் வருகைக்கு எதிா்ப்பு காங்கிரஸாா் 5 போ் கைது
அரியலூா் மாவட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த பிரதமா் மோடிக்கு எதிா்ப்பு தெரிவித்து, கருப்புக் கொடி காண்பித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்த இளைஞா் காங்கிரஸ் கட்சியினா் 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
பிரதமா் நரேந்திர மோடி, அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா். பிரதமா் வருவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கருப்புக் கொடி காண்பித்து ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக, பெரம்பலூா் மாவட்ட இளைஞா் காங்கிரஸ் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் து. ராஜீவ்காந்தி (35), காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினா் ப. சிவாஜி மூக்கன் (69), காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலா் த. தமிழ்செல்வன் (48), இளைஞா் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா் பெ. ஜெயபால் (25), காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினா் கு. தங்கவேல் (65) ஆகியோரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரம்பலூா் போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
பின்னா், கைது செய்யப்பட்டவா்கள் துறைமங்கலத்திலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை மாலை விடுவிக்கப்பட்டனா்.