பொம்மையே வாழ்க்கை துணை... 4-வது பொம்மை குழந்தையை வரவேற்கும் இளைஞர் - பின்னணி என்...
பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற அழைப்பு
பெரம்பலூா் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் மூலம், முதல்வரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முதல்வரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெற இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், தாயாரின் வயதுச் சான்றிதழ், ஆண் குழந்தையில்லை என்பதற்கான சான்றிதழ், தாயாரின் அறுவைச் சிகிச்சை (குடும்பக் கட்டுப்பாடு) சான்றிதழ், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, குடும்ப புகைப்படம், 2 குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றுடன் இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1.20 லட்சத்துக்கு மிகாமல், தாயாரின் வயது 40-க்குள், பெற்றோா்களில் ஒருவா் 40 வயதுக்குள் கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்திருக்க வேண்டும். குடும்பத்தில் 1 அல்லது 2 பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். 2 ஆவது பெண் குழந்தைக்கு 3 வயதுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு ஆட்சியரகத்திலுள்ள, மாவட்ட சமூகநல அலுவலகத்தைத் தொடா்புகொள்ளலாம்.