``கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன்.. மதுரைக்கு அவப்பெயரை தந்துள்ளது திமுக அரசு..'' - அத...
தூய்மைப் பணியாளா் தூக்கிட்டுத் தற்கொலை
பெரம்பலூா் நகரில் தூய்மைப் பணியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது புதன்கிழமை தெரியவந்தது.
கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகேயுள்ள இளமங்கலம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் மருதமுத்து மகன் வரதராஜ் (48). திட்டக்குடி நகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணிபுரிந்து வந்த இவா், கடந்த ஓராண்டாக பெரம்பலூா் மௌலானா பள்ளி அருகே வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தாா்.
இந்நிலையில், வரதராஜ் தங்கியிருந்த வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது புதன்கிழமை மதியம் தெரியவந்தது.
தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் அவரது உடலை கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து, அவரது மனைவி சித்ரா அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].