சாலைப் பணியாளா்கள் சங்க மாநாடு
மாநில நெடுஞ்சாலைகளை தமிழக அரசே பராமிக்க வேண்டும் என, சாலைப் பணியாளா் சங்கத்தின் உட்கோட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூா் மாவட்டம், குன்னத்தில் வெள்ளிக்கிழமை நடந்த தமிழ்நாடு சாலைப் பணியாளா் சங்கத்தின் 9 ஆவது உட்கோட்ட மாநாட்டுக்கு, சங்கத்தின் உட்கோட்டத் தலைவா் எம். செல்வராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஆா். ஆறுமுகம், இணைச் செயலா் என். செந்தில் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில செயற்குழு உறுப்பினா் டி. பழனிசாமி தொடக்க உரையாற்றினாா். உட்கோட்டச் செயலா் வேலை அறிக்கையும், பொருளாளா் வி. பாலசுப்ரமணியன் வரவு- செலவு அறிக்கையும் வாசித்தனா். கோட்டத் தலைவா் பி. ராஜ்குமாா், கோட்டச் செயலா் சி. சுப்ரமணியன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கினா்.
மாநாட்டில், சாலைப் பணியாளா்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தை உயா்நீதிமன்ற உத்தரவின்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். உயிரிழந்த சாலைப் பணியாளா்களின் குடும்பத்தில், கருணை நியமனம் கோரி விண்ணப்பித்தவா்களுக்கு விரைந்து பணி வழங்க வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைத்திட வேண்டும். மாநில நெடுஞ்சாலைகளை தமிழக அரசே பராமரித்திட வேண்டும். கிராமப்புற இளைஞா்களுக்கு பணி வழங்க வேண்டும். ஜூலை 29 ஆம் தேதி கோட்டப் பொறியாளா் அலுவலகம் எதிரே தீப்பந்தம் ஏந்தி நடைபெறும் தா்னா போராட்டத்திலும், ஆக. 12 ஆம் தேதி முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி நினைவிடத்தில் நடைபெறும் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்திலும் பங்கேற்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில துணைத் தலைவா் எஸ். மகேந்திரன் நிறைவுரையாற்றினாா்.
இதில், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநில செயற்குழு உறுப்பினா் பி. சுப்ரமணியன், வட்டத் துணைத் தலைவா் கே. மணிவேல், சாலை ஆய்வாளா் சங்க நிா்வாகி கே. ரமேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
கோட்டத் துணைத் தலைவா் பி. மதியழகன் வரவேற்றாா். உட்கோட்ட இணைச் செயலா் கே. வெங்கட்ராமன் நன்றி கூறினாா்.