செய்திகள் :

தங்க வளையல்! - சிறுகதை

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

அன்று சனிக்கிழமை அலுவலக கணினி திரையில் 5:00 மணிக்கான குறுஞ்செய்தி எட்டிப் பார்த்தது அதனை பார்த்தவுடன் மீண்டும் ஒரு முறை சரி என தெரிந்துக் கொள்ள தனது வாட்சை நிமிர்த்தி பார்த்தேன். அதுவும் ஐந்தை கடந்து தான் ஓடிக்கொண்டிருந்தது..

எனது அலுவலக இருக்கை உள் நுழைந்தவுடன் மூன்றாவது நபராக இருப்பேன் மேஜை முழுவதும் கோப்புகளாலும் வண்ண பேனாக்களாலும் சிதறி கிடக்கும். தனியார் நிறுவனம் என்பதால் நிறுவனத்தின் பெயர் பலகை மேஜையின் ஓரத்தில் அச்சாக பதிக்கப்பட்டு இருக்கும்..

மதியம் மனைவி கொடுத்த டிபன் பாக்ஸ் கூட இரண்டாவது பிரிக்கப்பட்டு காயவைக்கப்பட்டிருந்தது.. நிமிர்ந்து பார்த்தேன் ஒவ்வொருவராக கணினியின் மின் இணைப்பு சுச்சை அணைக்கும் சத்தமும் நாற்காலி நகரும் சத்தமும் உரையாடல் சத்தமும் அங்கங்கே கேட்டுக் கொண்டிருந்தது.என் அருகில் இருந்த நண்பர் கிளம்பலாமா? என்று கேட்டார் நானும் அதற்காக தயாராக தான் இருந்தேன்.

சனிக்கிழமை என்பதால் யாரும் அதிகநேர வேலை செய்வதில்லை ஐந்து மணி தாண்டியது என்றால் எல்லோரும் கிளம்பி விடுவார்கள். அதுதான் அலுவலக நடைமுறையும் கூட அந்த வரிசையில் நானும்.

நாற்காலியில் உட்கார்ந்தபடியே அலைப்பேசி எடுத்து துரை என பெயர் கொண்ட அந்த முதல் எண்ணையே தொடர்புக் கொண்டேன்.

முதல் முறை தொடர்புக் கொள்ளும் பொழுது அவர் அழைப்பை எடுக்கவே இல்லை சரி ஏதோ வேலையில் இருப்பார் போல என்று மனதை தேற்றிக்கொண்டு நானும் அலுவலகத்தில் இருந்து வெளியே செல்ல நடந்தேன்.. செல்லும் வழியில் என் அலுவலக நீண்ட நாள் நண்பன் ஒருவன் கண்ணில் பட்டான் அவனிடம் கேட்கலாமா? இல்லை அவனிடம் எங்கிருக்கும் இதுவரை கேட்டதும் இல்லை எப்படி கேட்பது?

சரி விடு பாத்துக்கலாம் என்று பைக் பார்க்கிங் நோக்கி நகர ஆரம்பித்தேன் பைக்கில் உட்கார்ந்தபடியே ஏதோ ஒன்று சிந்தித்துக் கொண்டு மீண்டும் அலைப்பேசி எடுத்து துரை என்ற எண்ணிற்கு அழைப்பு கொடுத்தேன் கடைசி அழைப்பு ஒலியில் எடுக்கப்பட்டு,

“ஹலோ அண்ணா காசு கேட்டிருந்தேன் நீங்க இன்னைக்கு தாரேன்னு சொன்னீங்க….” என்று இழுத்து முடித்து விட்டேன்..

“டேய் ஆமாடா மறந்துட்டேன் இப்பதான் ஒரு அர்ஜென்ட் விஷயமாக வெளியே போனேன் இருந்த காசு அப்படியே செலவாயிடுச்சு நாளைக்கு தரட்டுமா?”

“இல்ல அண்ணா இன்னைக்கு கிடைச்சா நல்லா இருக்கும் நாளைக்கு பங்க்ஷன் வீட்டுக்கு போகணும் அங்க தான் கொடுக்கணும் என்ன பண்ண தெரியல முக்கியமான சொந்தக்காரங்க பங்க்ஷன் போய் ஆகணும்!”

“சரிடா நான் பார்த்துட்டு உனக்கு ஒரு நைட் போல கால் பண்ணி சொல்றேன் டா” அவரிடம் எதிர்பார்த்த கடைசி நம்பிக்கையும் செல்போன் அழைப்பிலே முடிந்து விட்டது.

அலுவலகத்திலேயே என்னோடு பழகும் ஒரு மேலதிகாரி துரை அதிகமான சம்பளம் வசதியான வாழ்க்கை என்பது பார்வையிலே தெரியும் எப்போதும் அவர் உதவி செய்வார் ஆனால் இன்று என்னவோ?...

என்ன செய்வது என்றே தெரியாமல் இருசக்கர வாகனத்தை ஆன் செய்து மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தேன். கையில் இருந்த 500 ரூபாயில் 100 ரூபாய்க்கு மனைவி வாங்க சொன்ன மளிகை சாமானுக்கு சரியாக இருந்தது. இன்னும் மாதத்தில் கடைசி ஏழு நாட்களை கடப்பதை நினைத்தால் தொண்டையில் உமிழ் நீர் இன்னும் ஒரு முறை விழுங்கி பார்த்தேன்.

திடீரென்று நினைவு வந்தது போல் பைக்கில் பெட்ரோல் இருப்பதே திறந்து பார்த்தான் அது ஏதோ கப்பல் தரை தட்டி நிற்பது போல் இன்னும் கொஞ்ச நேரத்தில் நின்று விடும் அளவிற்கு ஒரு சில துளிகள் மின்னியது வருத்தத்திலேயே பெட்ரோல் பங்கை நோக்கி நகர்ந்தேன்.. ஐம்பது ரூபாய்க்கு பெட்ரோல் இட்டுக்கொண்டு மனைவி வாங்க சொன்ன அனைத்தையும் வாங்கி விட்டேனா? என்ற சிந்தனையில் வீட்டை நோக்கி நகர்ந்தேன்.

மனைவிக்கு என்ன பதில்? நாளை நிகழ்ச்சிக்கு செல்லாமலும் இருக்க முடியாது.. சொந்தக்காரர்களுக்கு என்ன பதில்? சொல்வது?

நிகழ்ச்சியோ மனைவியின் குடும்பத்தில் முக்கியமான நிகழ்ச்சி அவளின் தங்கையின் திருமணம் குறைந்தது பத்தாயிரத்திற்கு மேலாவது மொய் வைத்தே ஆக வேண்டும் என்ன செய்வது என்று தெரியாமலேயே நகர்ந்து கொண்டிருந்தேன்…

வைக்கவில்லை என்றால் மனைவியை கூட சமாளித்து நிலையை புரிந்துக் கொள்வாள். ஒரு வகையில் அவள் கூட எதிர்பார்க்க தானே செய்வாள். இருந்தாலும் மாமியார் மாமனாரை நினைக்கும் பொழுது.. சரி நாளை வரை நேரம் இருக்கிறதே பார்த்துக் கொள்ளலாம் என்று நகர்ந்தது அந்த நிமிடங்கள்.

 வீட்டினுள் நுழைந்தவுடன் மனைவி தன் கையில் இருந்த பையை வாங்கியவுடன் ஆரம்பித்தால் “அம்மா இப்பதான் போன் பண்ணாங்க காலையில கொஞ்சம் சீக்கிரமாய் வர சொல்றாங்க..”

“நைட்டே முடிஞ்சா வந்தாலும் சரி என்று தான் சொன்னாங்க” நான் தான் காலையிலேயே வந்துக்கிறேன்னு சொல்லிருக்கேன்…அவள் சொல்லிய ஒரு சில வார்த்தைகள் தான் என் மூளையை கசக்கியது மற்ற வார்த்தைகள் எல்லாம் என் காதோடு விட்டு விட்டேன். எல்லாவற்றிற்கும் சரி பார்க்கலாம் என நினைத்துக் கொண்டு கடந்தேன்..

அவளும் வழக்கமாக சொல்வது போல

“இன்னைக்கும் நான் சொன்னதை மறந்து விட்டீர்கள்” என்ற அவள் குரல் முணுமுணுத்தது

“சரி நான் அப்புறம் போகும் போது வாங்கி தரேன்” என்று அவளை சமாளித்து முடித்து விட்டேன்..

வீட்டின் நடுவில் ஓரத்தில் உள்ள ஒரு சோபோவில் எதையோ ஒன்றை யோசித்தவாறு அமைதியாக உட்கார்ந்து இருந்தேன். ஆவி பறக்கும் தேநீருடன் என் அருகில் வந்து அமர்ந்தாள்.. எப்போதும் வந்தவுடன் செல்பேசி எடுத்துக்கொண்டு எதையோ ஒரு காணொளியை பார்த்து சிரித்துக் கொண்டிருக்கும் நான் அன்று அமைதியாக இருந்ததைப் பற்றி என் மனைவி நிச்சயம் யோசித்திருப்பாள்.

வழக்கம் போல கேட்கும் கேள்வி அன்று பாவமாக கேட்டால் இன்னைக்கு அலுவலகம் என்ன ஆச்சு ஏதாவது பிரச்சனையா அமைதியா இருக்கீங்க என்று நக்கல் சிரிப்புடன் அவை கேட்டவுடன் நானும் அவளை பார்த்து சிறிய புன்னகையுடன் அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல என்று முடித்துக் கொண்டேன்..அவள் இரு கால்களையும் தனது மடியில் வைத்து ஒவ்வொரு விரலாக இழுத்து விட்டேன்...

பின்பு எப்படி இருந்தாலும் அவளுக்கு தெரியும் இருந்தாலும் நானே சொல்வது தானே மரியாதை. என் மனைவியிடம் சொல்வதில் எனக்கு என்ன மானப்பிரச்சனை. துரை அண்ணன் கிட்ட பத்தாயிரம் ரூபாய் கடன் கேட்டிருந்தேன் அவர் கடைசி நேரத்தில் கை விரித்து விட்டார்..

வேற யார்கிட்டயும் நான் கேட்டதும் இல்லை என்ன செய்யணும் தெரியல நாளைக்கு உன் தங்கச்சி கல்யாணத்துக்கு எப்படி வெறுங்கையோட போறது.. என்றவாரே தூங்கிக் கொண்டிருந்த அலைபேசிக்கு விழிப்புக் கொடுத்தேன்..அவளும் அமைதியாக என் மடியின் மீது வைத்து இருந்த கால்களை மெதுவாக நழுவி எழுந்து சென்று விட்டாள்.கையில் இருந்த டீயை குடிக்கவே மனம் இல்லாமல் பிடித்துக் கொண்டிருந்தேன்.

மௌனத்தின் வலி பெரிதாக இருந்தாலும் எதிரே இருப்பவர்களுக்கு புரிவதே இல்லை.. வழக்கமான இரவு உணவிற்கு தயாராக சமையல் அறையிலேயே தவம் இருந்தாள்..அணைக்கப்பட்ட டிவியும் பயன்படுத்தாத செல்போனும் அங்கங்கே அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. தன் தாய் வீட்டிற்கு போகாமல் இருக்க எந்த பெண்ணுக்கு தான் மனம் இல்லாமல் இருக்கும் நானே கேட்டேன்.

சற்று நீண்ட அமைதிக்கு பிறகு..

“நீ வேண்டுமானால் இரவே அம்மா வீட்டுக்கு சென்று விடு நான் காலையில் வந்து திருமணத்தில் கலந்து கொள்கிறேன்…”

அவளும் இரவு சாப்பாட்டை சீக்கிரமாக முடித்துவிட்டு கிளம்பினாள் அவளுடைய திருமண ஆடை அனைத்தையும் ஒரு பையில் போட்டுக் கொண்டு ரெடியாக இருந்தாள் என்னுடைய துணிகள் எல்லாவற்றையும் கட்டில் மேலே எடுத்து சரியாக வைத்துவிட்டு சென்றாள்.. அவளைக் கொண்டு அம்மா வீட்டில் விட்டுவிட்டு வரும் வரை மௌனம் மட்டுமே துணை இருந்தது..

“எப்படியாவது பணத்தை தயார் செய்து விடவும்” என்று அவளை சொல்லிவிட்டு சென்றது போல் இருந்தது அந்த மௌனம்.. அந்த மௌனத்தை கலைத்து “காலையில சீக்கிரம் வந்துருங்க” என்று நடையை கட்டினாள் இருந்தும் அதே எண்ணம் மட்டும் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.. இரவில் என்னை அறியாமல் கண் தூங்கிவிட்டது..

காலை எழுந்தவுடன் முதல் அலைபேசி குரல் அலாரம் போல் அவள் குரலாகவே இருந்து.

“என்னங்க எழுந்துடீங்களா? நான் ரெடி ஆகி மண்டபத்திற்கு கிளம்பிட்டு இருக்கோம் நீங்க சீக்கிரம் வாங்க “

“ம்ம் சரி மா” என்று முடிக்கப் பட்டது அந்த அழைப்பு..

எனது அலைபேசி எடுத்துப் பார்த்தேன் துரை அண்ணன் ஐந்தாயிரம் ரூபாய் அனுப்பி இருந்தார் அவருக்கு குறுஞ்செய்தி வழியாக நன்றியை தெரிவித்து விட்டு சிறிய உற்சாகத்துடன் கிளம்பி சென்றேன்… மனைவியின் அழைப்பு என்னை அவசரப்பட வைத்தது. நானும் அவசர அவசரமாக திருமண வீட்டிற்கு செல்லும் வழியில் ஏடிஎம் வழியாக பணத்தை எடுத்துக் கொண்டுச் செல்லலாம் என ஏடிஎம்மில் சென்று பணத்தை எடுத்து பாக்கெட்டில் வைக்கும் போது தான் தெரிந்தது என் பாக்கெட்டில் ஏற்கனவே ஒரு பொருள் இருக்கிறது கைவிட்டு எடுத்து பார்த்தேன் அது என் மனைவியின் தங்க வளையல்…திருமண வீட்டிற்கு சென்ற கையோடு

சிறிய புன்னகையுடன் மறக்காமல் வாங்கிய மல்லிகைப்பூவுடன் வளையலையும் அவளுக்கு அணிவித்தேன்…

மனம் மாறதா காதல் வாசனை

மல்லிகை உடன் மணந்தது அந்த திருமண விழாவில்…

-எழுதியவர்

ரசூல் முகைதீன் அப்பாஸ்

கன்னியாகுமரி மாவட்டம்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

வீரம், அறம், காதல்... வேள்பாரியில் உங்களைக் கவர்ந்த விஷயம்! - உலகுக்கு சொல்லுங்கள் | My Vikatan

ஆனந்த விகடனில் சு.வெங்கடேசன் எழுத்தில், மணியம் செல்வன் ஓவியங்களுடன் 'வீரயுக நாயகன் வேள்பாரி' தொடராக வந்தபோது லட்சக்கணக்கான வாசகர்கள் பிரமிப்பு குறையாத மனதுடன் அதை வாசித்தார்கள். தமிழ் மக்களின் கருணை, ... மேலும் பார்க்க

விருப்பம் இல்லாத திருமணம் ஏற்படுத்திய மாற்றம்! | #ஆஹாகல்யாணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சின்ன வெங்காயம் - சிறுகதை

காலையில் அவசர அவசரமாக அலுவலகத்திற்கு புறப்பட்ட குமரன், காலையில் வீட்டிற்கு வந்த செய்தித்தாளை கூட படிக்க நேரமில்லாமல், அதை கூடவே எடுத்துச் சென்றான். அங்கு சென்ற சற்று நேரத்தில், ஒரு முக்கிய வேலைக்காக ச... மேலும் பார்க்க

என் காதல் கண்மணி! - ஜில்லுன்னு ஒரு லவ் ஸ்டோரி | #ஆஹாகல்யாணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

என் கல்யாண சாப்பாட்டைப் பற்றி நக்கலாக பேசும் போது ஏற்படும் வலி! - 90ஸ் திருமண அனுபவம் | #ஆஹாகல்யாணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

குட்டிம்மா - சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க