OTT App Ban: 25 ஓடிடி செயலிகளுக்குத் தடை; எம்.பி-யின் குற்றச்சாட்டும், அரசின் அத...
என் கல்யாண சாப்பாட்டைப் பற்றி நக்கலாக பேசும் போது ஏற்படும் வலி! - 90ஸ் திருமண அனுபவம் | #ஆஹாகல்யாணம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
கல்யாண சமையல் சாதம்
1993ம் ஆண்டு நவம்பர் 24..
எங்க வீட்டு இளவரசியின் (நான்தான்) கல்யாண வைபோகம்!!
மிக மிக அவசர கல்யாணம் என்றுதான் சொல்ல வேண்டும்.ஆம் பெண்பார்க்கும் படலம் அக்டோபர் 28. அதுவே ஒரு வித்யாசமான அனுபவம். நாங்கள் மாப்பிள்ளை பார்க்கச் சென்னைக்கு சென்றோம். மாப்பிள்ளை வீட்டார் பார்த்து விட்டு , ok சொல்ல வேண்டுமே என்ற எதிர்பார்ப்பு .. இவர்கள் பார்த்து விட்டு மறுநாள் மதியம் 3மணி போல் phone செய்து சொல்கிறோம் என்று சொல்ல , exam முடித்து resultகு waiting..
ஆத்தா நான் பாஸாயிட்டேன்.
Preliminary round பாஸாயாச்சு.

அக்டோபர் 29 அன்று இரவே சென்னையிலிருந்து கிளம்பி திருச்சி வந்து, அண்ணா,மன்னி என சொந்தங்களுடன் பஸ்ஸில் கிளம்பி நவம்பர் 2ம் தேதி நிச்சயதார்த்தத்திற்கு வந்தாச்சு.. நவம்பர் 24 என தேதியும் குறிக்க மிக மிக துரிதமாக வேலைகள் நடந்தன.
இதற்கு இடையில் 13 ம் தேதி தீபாவளி கல்யாணப் புடவைகள் வாங்கலாம்னு பார்த்தா, தீபாவளி முடிந்து வாங்கலாம்னு சொல்லிட்டதால, நானும் என்னோட அண்ணா, மன்னியுடன் திருச்சி நல்லி சென்று புடவைகளைக் கண்ணாற பார்த்துவிட்டாவது வருவோம் என கடைக்குச் சென்று வந்தோம்.. தீபாவளி முடிந்து 3 நாட்களுக்கு கடை விடுமுறை. ஆக 17 தேதிக்கு தான் கல்யாண ஜவுளி வாங்க முடிந்தது..மிகவும் அழகாக கொடுத்த பட்ஜெட்டில் வாங்கினேன் என்று என் அண்ணாவிடமிருந்து பாராட்டு..
ஐந்தே நாட்களில் லீமா டெய்லரும் பிளவுஸ் தைத்துக் கொடுக்க ஒரே சந்தோஷம்.
அன்றைய கால கட்டங்களில் சமையல் காண்டிராக்டர்கள் அவ்வளவாக பிரபலமாகவில்லை. என்றாலும் வேறு வழியில்லாமல் முதல் முறையாகக் கொடுத்தோம்..
மூன்று நாள் திருமணம். திருமண நாளும் நெருங்க,மனதிற்குள் கொஞ்சம் பயம் கலந்த மகிழ்ச்சி.
இதற்கு நடுவில் நானே மெஹந்தி வைத்து விடுவேன் என்று என் மூன்றாவது மன்னி மருதாணி வைத்து விட, அவர்களுக்கு கொஞ்சம் cold மற்றும் fever.
இவர்கள்(என் கணவர் மற்றும் உறவினர்கள்) சென்னையிலிருந்து வர வேண்டும்...காலை 6 மணியளவில் கிளம்பி மதியம் 2:30 மணியாகியும் வரவில்லை என்றவுடன் ஒரே பதட்டம்.அப்போது கைபேசியெல்லாம் கிடையாதே.. ஒரு வழியாக வந்து சேர்ந்தனர்.
23 ம் தேதி மாலை மாப்பிள்ளை அழைப்பு மிக விமரிசையாக நடந்தது..கோவிலுக்கு செல்லும் போது வாசலில் நின்றிருந்த மயில் வாகனக் காரை பார்த்துவிட்டு , இது என்ன காரை இப்படி நிறுத்தி வைத்துள்ளார்களே என்று நினைத்துக் கொண்டே உள்ளே சென்றுள்ளார் மாப்பிள்ளை. பின்புதான் தெரிந்துள்ளது இது நம்ப மாப்பிள்ளை அழைப்பு வண்டி என்று. ஒரு வழியாக மண்டபத்திற்கு வந்து சேர்ந்தது மயில் வாகனம்.. பின்பு நிச்சயதார்த்தமும் நல்ல படியாக முடிந்து ஜான்வாச சாப்பாடும் போளி மற்றும் பால் பாயசத்துடன் முடிந்தது.

முகூர்த்த நேரமும் வர, என் பெரிய அண்ணா தாரை வார்த்துக் கொடுக்க( என் 17 வயதில் அப்பா இறந்து விட்டார்)திருமணமும் முடிந்தது.. மாலை ரிசப்ஷன்.. நண்பர்கள் மற்றும் உறவினரின் வருகையோடு , அழையா விருந்தாளியாக வருணபகவானும் வந்து விட்டார். ரிசப்ஷன் டின்னரும் முடிந்தது...எல்லாம் நல்லபடியாக நடந்தது என்று நினைத்த நேரத்தில் என் பெரியம்மாவிற்க்கு ஆரம்பித்தது loose motion...அப்படியே சிலருக்கும் தொடர குடும்ப டாக்டரிடம் ஓட வேண்டிய நிலை..
கடவுள் புண்ணியத்தில் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லாமல் போனது.
கட்டுசாதம் வைத்து என் கணவர் வீட்டுக்கும் வந்து சேர்ந்தோம்.
இப்போதும் சில கல்யாணங்களில் உறவினர்கள் கூடும்போது, என் கல்யாண சாப்பாட்டைப் பற்றி கொஞ்சம் நக்கலாக பேசும் போது மனசில சிறு வலி வந்து போகும்..
இதோ 32 வருடங்கள் ஓடி விட்டது.. என் பிள்ளைக்கும் திருமணத்திற்கு பார்த்துக் கொண்டு இருக்கிறோம்...
விரைவில் ஒரு தேவதை எங்கள் வீட்டிற்கு வர கடவுள் அருள் புரியவேண்டும்.
-சத்யா ரவி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.