ஜம்மு-காஷ்மீரில் கண்ணிவெடியில் சிக்கி அக்னிவீரர் பலி !
ஜம்மு-காஷ்மீரில் கண்ணிவெடியில் சிக்கி அக்னிவீரர் ஒருவர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் எல்லை மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா காட்டி பகுதியில் ராணுவ வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பூமிக்கடியில் புதைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி ஒன்று வெடித்தது.
இந்த சம்பவத்தில் 7 ஜேஏடி படைப்பிரிவைச் சேர்ந்த லலித் குமார் என்ற அக்னிவீரர் பலியானார்.
குண்டு வெடிப்பு நடந்த உடனேயே, நிலைமையை ஆய்வு செய்ய கூடுதல் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கண்ணிவெடி வெடிப்புக்கான காரணத்தை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தையும், குண்டுவெடிப்பில் வீரர் பலியானதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆபரேஷன் சிந்தூர்: மக்களவையில் விவாதத்தை தொடக்கி வைக்கும் ராஜ்நாத் சிங்!
ஜம்முவை தளமாகக் கொண்ட ராணுவத்தின் ஒயிட்ட் நைட் (16) கார்ப்ஸ், இந்த துயரமான நேரத்தில் நாங்கள் துயரமடைந்த குடும்பத்தினருடன் நிற்கிறோம் என்று எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.