செய்திகள் :

என் காதல் கண்மணி! - ஜில்லுன்னு ஒரு லவ் ஸ்டோரி | #ஆஹாகல்யாணம்

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

என் காதல் கண்மணி - அவளை பார்த்த முதல் நொடி முதல், இந்த நொடி வரை எல்லாமே அதிசயம் தான், 

என் பெயர் ராம், 2011 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் ஒரு கல்லூரியில் பொறியியல் முதல் வருடம் படித்துக்கொண்டிருந்தேன், வழக்கமான காலை வேளையில் என்னுடைய பைக்கில் கல்லூரிக்கு சென்றுக்கொண்டிருந்தேன், போகும் வழியில் எத்தனையோ பேருந்துநிறுத்தங்கள் உண்டு, அதில் எத்தனையோ பேர் நிற்பதும் உண்டு, ஆனால் அதில் ஒரு முகம் மட்டும் அன்று எனக்கு தனியாக புலப்பட்டது,கருப்பு பர்தாவில் அவள் ஒளிந்திருந்தாலும் அவள் முகம் மட்டும் ஒளிர்ந்திருந்தது 

கருப்பு சட்டை அணிந்திருந்த எனக்கும், கருப்பு பர்தா அணிந்திருந்த அவளுக்கும் தான் காதல் மலர போகிறது என்பது தெரியாமலே கடந்து சென்றுவிட்டேன் அன்று.

ஏதோ ஒரு இயல்பான  சிறு நொடி பார்வை தான் அது, பிறகு அவள் வழியில் அவளும், என் வழியில் நானும் பயணித்துக்கொண்டிருந்தோம், இப்படியே இரண்டரை வருடங்கள் ஓடிவிட்டன, இதற்கு இடையில் நானும் அவளும் கண்டிப்பாக பல தடவை கடந்து சென்றிருப்போம், ஆனால் என் கண்ணில் பெரிதாக தனியாக கவனிக்கும் விதத்தில் அவள் புலப்படவில்லை.

என் நண்பன் பிரவீன் எங்கள் கிளாஸ்மேட்ஸ் அனைவரிடம் நான் நஸ்ரினை காதல் செய்கிறேன் என விளையாட்டாக கிளப்பிவிட, அது காட்டு தீயாக நண்பர்கள்யிடையே கல்லூரி முழுக்க பரவினது, நான் அதை மறுத்தாலும் அழுத்தமாக மறுக்கவில்லை,

வழக்கமான காதல் படங்களில் வருவது போல் என் நண்பர்கள்  நஸ்ரின் வரும்போதும் போகும்போது என் பெயரை சொல்லி கத்த ஆரம்பித்தனர் (குறிப்பு: நான் இதை எல்லாம் செய்ய சொல்ல வில்லை), அந்த பெண்ணிடம் இருந்து எந்த  ரியாக்ஷனும் இல்லை, என் நண்பர்களும் தொடர்ந்து என் பெயரை அவள் முன்னால் விளையாட்டாக கத்திக்கொண்டே இருக்க, ஒரு நாள் நான் அவளிடம் நேரில் சென்று  முதல் முறையாக பேசினேன்

“Sorry, நா இதெல்லாம் பண்ண சொல்லல, என் friends தான் சும்மா ஓட்றாங்க, தப்பா எடுத்துகாதிங்க” என்று பதற்றத்தோடு நான் சொல்ல, அவள் ஏதோ புரியாத மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு “ஓகே” என தலையை ஆட்டினாள்

சரி சொல்வதை சொல்லிவிட்டோம் என்று நானும் நடையை கட்டினேன், என் நண்பர்கள் நான் பயப்படுவதை வைத்து குளிர்காய்ந்தபடி, மறுபடியும் என் பெயரை சொல்லி நஸ்ரினை ஓட்ட ஆரம்பித்தனர், அப்போது அவள் திடீர் என என்னை திரும்பி பார்த்து சிரிக்க, மொத்தமும் முடிந்துவிட்டது, அப்போது ஏற்பட்ட உணர்வு  இதற்கு முன்னால் எனக்கு தோன்றினதே இல்லை.

தொடர்ந்து என் நண்பர்கள் என் பெயரை சொல்லி கத்த, அதை அவள் இயல்பாக எடுத்துக்கொண்டு சிரித்தபடி கடந்து சென்றுக் கொண்டிருந்தாள், என் நெருக்கமான நண்பர்கள் என்னை போய் அவளிடம் பேச சொன்னார்கள், ஆனால் நான் அவளிடம் பேசவே இல்லை,

இப்படியே கல்லூரியின் இறுதி நாள் வந்தது, எங்கள் கிளாஸில் எல்லோரும் கேக் வெட்டி ரகளை செய்துக் கொண்டிருந்தோம், நான் முகத்தில் இருந்த கேக்கை பாத்ரூம் சென்று சுத்தம் செய்துவிட்டு மீண்டும் கிளாஸிற்கு வர, அங்கே என் நண்பர்கள் நஸ்ரின் உன்னை தேடி இங்க வந்துச்சு, உன்ன அவளோட கிளாஸ் க்கு வரசொன்னுச்சு” என சொன்னார்கள், நான் நம்பவில்லை, இருந்தாலும் அவள் கிளாஸ் முன்னால் போய் நின்றேன், அவள் என்னை பார்த்ததும் தன் நண்பர்களை விட்டு மெல்ல என் பக்கத்தில் வந்து நின்றாள், மனசு படபடத்தது “ என்ன கூப்டிங்கன்னு பசங்க சொன்னாங்க” என்றேன்,.

அவள் பதில் சொல்லும் அந்த சிறு இடைவெளியில் ஒரு சிறு பூகம்பம் என் மனதில், நல்ல வேளை அவள் ஆமாம் என்றாள், நீண்ட நாட்களாக பார்க்கிறோம் பேசியதே இல்லை அதான் கூப்டன்” என்று அவள் சொன்னதும் எனக்கு தைரியம் வந்தது, உடனே நம்பர் கேட்டேன்,  எங்க வீட்டில் ரொம்ப strict bye என்று சொல்லிவிட்டாள், ஏன்டா நம்பர் கேட்டோம் என்று ஆகிவிட்டது, பின் பெருசாக பேசவில்லை வீட்டுக்கு வந்து விட்டேன்..

பின் அடுத்த நாள் whats app ல் எனக்கு ஒரு message வர, என் உள்உணர்வு சொல்லியது அவள் தான் என்று,இருந்தாலும் fake id அதிகமாக உலாவிய காலம் என்பதால்  ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்ப சொல்லி உறுதிப்படுத்திக் கொண்டேன், பின் என்ன அவ்வளவு தான், இரவு எப்போது பகல் எப்போது என்பது எனக்கு நினைவில் இல்லை, எவ்வளவு பேசினாலும் வார்த்தைகள் தீரவே இல்லை,ஒரு ஆணும் பெண்ணும் எவ்வளவு தூரம் அவர்களை பற்றின உண்மைகளை பரிமாறிக்கொள்ள முடியும்,

எல்லாவற்றையும் புயல் வேகத்தல் பேசி தீர்த்தோம்,  நாங்கள் இதுவரை கடந்து வந்த காதல்,காமம்,க்ரஷ்,ப்லர்ட் என எல்லாவற்றையும் ஒருவருக்கொருவர் உளறி தீர்த்தோம், அவளுக்கு 8 வயதில் நடந்த ஒரு பாலியல் துன்புறுத்தல் பற்றியும் கூறினாள், அப்படி என்ன அவளுக்கு என் மேல் நம்பிக்கை? யாரிடமும் சொல்லாததை கூட என்னிடம் கூறினாள், 

இது காதலை தாண்டின உணர்வாக எனக்கு தோன்றினது, ஆனால்  ஜாதி,மதங்களை தாண்டி நாங்கள் ஒன்று சேருவது அவ்வளவு சுலபம் இல்லை என்று கல்லூரி முடித்த பிறகுதான் எங்களுக்கே புரிந்தது, இருவர் வீட்டிலும் எவ்வளவு முயற்சி செய்தும் ஒற்றுக்கொள்ளவே இல்லை, இறுதியில் பெரும் சண்டையில் தான் முடிந்தது, நாளடைவில் எங்களுக்குளையே பெரும் சண்டை வெடித்தது, அவள் பாவம் சரியாக வேலைக்கு போகாதவனை காதலித்து விட்டு பல நூறு ஆண்டுகளாய் பழுது அடைந்திருக்கும் சமுகத்தையும் எப்படி தனி ஆளாக மாற்றமுடியும்,

இறுதியாக அவளை மாற்ற முடிவு செய்துக்கொண்டு வெளிநாடு சென்றுவிட்டாள், அவ்வளவு தான் எல்லாம் முடிந்து விட்டது, என்று நினைக்கும் போது தான் என் வீட்டு வாசலில் கிடந்தது துபாய் விஸா, அவள் எனக்காக இன்னும் என்ன தான் செய்வாள்? உடனடியாக துபாய்க்கு சென்று அங்கே வேலை பார்த்தேன், அவளையும் அப்போ அப்போ அங்கேயே சந்தித்தேன், பின் இருவரும் இந்தியா வந்து  மீண்டும் உறுதியாக சொன்னோம் “திருமணம் செய்கின்றோம் என்று”  இதற்கு மேல் என்ன செய்வார்கள் பல  கூச்சலுக்கு பிறகு நடந்தது எங்கள் திருமணம். 

வீரம், அறம், காதல்... வேள்பாரியில் உங்களைக் கவர்ந்த விஷயம்! - உலகுக்கு சொல்லுங்கள் | My Vikatan

ஆனந்த விகடனில் சு.வெங்கடேசன் எழுத்தில், மணியம் செல்வன் ஓவியங்களுடன் 'வீரயுக நாயகன் வேள்பாரி' தொடராக வந்தபோது லட்சக்கணக்கான வாசகர்கள் பிரமிப்பு குறையாத மனதுடன் அதை வாசித்தார்கள். தமிழ் மக்களின் கருணை, ... மேலும் பார்க்க

தங்க வளையல்! - சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

விருப்பம் இல்லாத திருமணம் ஏற்படுத்திய மாற்றம்! | #ஆஹாகல்யாணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சின்ன வெங்காயம் - சிறுகதை

காலையில் அவசர அவசரமாக அலுவலகத்திற்கு புறப்பட்ட குமரன், காலையில் வீட்டிற்கு வந்த செய்தித்தாளை கூட படிக்க நேரமில்லாமல், அதை கூடவே எடுத்துச் சென்றான். அங்கு சென்ற சற்று நேரத்தில், ஒரு முக்கிய வேலைக்காக ச... மேலும் பார்க்க

என் கல்யாண சாப்பாட்டைப் பற்றி நக்கலாக பேசும் போது ஏற்படும் வலி! - 90ஸ் திருமண அனுபவம் | #ஆஹாகல்யாணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

குட்டிம்மா - சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க