விருப்பம் இல்லாத திருமணம் ஏற்படுத்திய மாற்றம்! | #ஆஹாகல்யாணம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
"திருமண நிகழ்வுகள்" இந்த தலைப்பு பார்த்ததும் சட்டென்று நினைவுக்கு வந்தது திருமணம் வேண்டாம் என்று நான் 'அழுதது' அதற்காக எங்கள் வீட்டில் என்னை அடித்து திருமணம் முடித்து வைத்தது தான் நினைவுக்கு வந்தது . எனக்கு வயது 18 நான் ஒரு மெடிக்கலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன் .
சிறு வயதிலிருந்து எனது அப்பா அம்மாவினுடைய சண்டையை பார்த்து வளர்ந்த எனக்கு "திருமணம்" செய்து கொள்ளும் எண்ணம் துளியும் இல்லை .அதுவும் இந்த வயதில் சுத்தமாக இல்லை.
நான் நன்றாக படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் என் தந்தை இல்லாத காரணத்தினால் என்னுடைய அம்மா மேற்கொண்டு படிக்க வைக்காமல் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து விட்டார் . அப்போது நான் வேலை பார்த்த முதலாளியும் என்னுடைய கணவருடைய மாமாவும் நண்பர்கள் அதனால் என்னைப் பற்றி சொல்லவும் சரி என்று நான் வேலை பார்க்கும் இடத்தில் வந்து எனக்கே தெரியாமல் பார்த்துவிட்டு சென்று விட்டார்.

அவருக்கு பிடித்திருந்தால் உடனே அவர்கள் வீட்டில் சம்மதம் சொல்லி பேச அழைத்து வந்து விட்டார். அவர்கள் வீட்டில் இவ்வளவு வரதட்சணை வேண்டும் என்று சொல்லி இருந்தார்கள். 'ஜாதகம் 'கேட்டிருந்தன. ஆனால் என்னுடைய மாமா என்னுடைய பிறந்த நேரத்தையும் ,தேதியையும் தவறாக எழுதிக் கொடுத்து விட்டார் .அதனால் பொருத்தம் இல்லை இந்த பெண் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.
பிறகும் என்னுடைய கணவர் என் அம்மாவிடம் போன் செய்து சரியான பிறந்த தேதி நேரம் எல்லாம் கேட்டு வாங்கிக் கொண்டு பிறகு ஜாதகம் பார்த்து பொருத்தம் இருக்கிறது என்று சொல்லி திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்து விட்டனர் .எல்லாம் செய்தவர் ஒருமுறை கூட என்னிடம் இந்த திருமணத்தில் விருப்பமா என்று கேட்கவே இல்லை . ஆனால் அவர் பால் கடை வைத்திருந்ததால் தினமும் ஐஸ்கிரீம் யாரிடமாவது எனக்கு கொடுத்துக் கொண்டே இருப்பார் .
அதை நான் ஒரு முறை கூட சாப்பிடவே இல்லை திருமணத்திற்கு முன்பு . அதன் பிறகு என்னுடைய கணவரே என் அம்மாவிடம் போன் செய்து உங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்தால் போதும் செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி இருந்தார். ஒரு வழியாக 2010ல் நல்லபடியாக திருமணம் நடந்து முடிந்தது. திருமணம் முடிந்த பிறகு தான் இந்த திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை என்பது அவருக்கு தெரியும் .அப்போது மிகவும் வருத்தப்பட்டார் .
ஆனால் அவரை எனக்கு பிடித்து விட்டது. ஆனால் திருமணம் முடிந்த நாளிலிருந்து இன்று வரை என்னிடமோ என் குடும்பத்திடமோ இதைச் செய்ய வேண்டும் அதைச் செய்ய வேண்டும் என்று எதுவுமே கேட்டதில்லை.
நான் என்ன வச்சிருக்கேன் என்ன கொண்டு வந்தேன் எதுவும் என் கணவருக்கு தெரியாது, இப்படி ஒரு வாழ்க்கை கடவுள் எனக்கு கொடுத்த பரிசு என்று தான் நினைக்கிறேன், ஆண்கள் மீது இப்போது கொஞ்சம் மரியாதையும் நம்பிக்கையும் வந்தது எனக்கு .ஏதோ ஒரு பண்டிகை வந்தபோது என்னுடைய மாமியார் உங்க வீட்ல இருந்து இந்த கட்டு எல்லாம் செய்யணும்னு கேட்ட அப்போ என்ன செய்யணும்னு சொல்லுங்க நான் செய்றேன் .

அவங்க தான் செய்யணும்னு எந்த அவசியமும் கிடையாது .கல்யாணம் முடிச்சதுக்கு அப்புறம் அவன் நம்ம வீட்டு பொண்ணு .என் பொண்டாட்டி நான் செய்வேன். நீங்க எதுவும் கேட்க கூடாது அப்படி அவங்க அம்மா கூடவே அவங்க சண்டை போட்டாங்க. வரதட்சணை கொடுமை என்ற செய்தி எல்லாம் கேட்கும்போது எனக்கு திருமணம் முடிந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது இன்னும் என்னுடைய கணவர் எங்கள் குடும்பத்திடமோ என்னிடமோ எதையும் எதிர்பார்த்தது இல்லை என்பதை நினைத்து பெருமை கொள்கிறேன்...,

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.