நடப்பாண்டில் 4ஆவது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை !
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் நடப்பாண்டில் நான்காவது முறையாக அணையின் முழு கொள்ளளவு 120 அடியை எட்டியது.
மேட்டூர் அணை நடப்பாண்டில் நான்காவது முறையாக நிரம்பியதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மாலை 16 கண் மதகுகள் வழியாக மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் மேட்டூர் வருவாய் துறை சார்பில் காவிரி கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிகை விடுத்து வருகின்றனர்.
மேட்டூர் அணையின் 16 கண் மதகு எதிரே உள்ள தங்கமாபுரி பட்டினம், அண்ணா நகர் பெரியார் நகர், சேலம் கேம்ப் உள்ளிட்ட பகுதிகளில் ஒலிபெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை! சூலூர்பேட்டையில் ஒருவர் கைது
மேலும் பொது மக்கள் காவிரி ஆற்றில் குளிக்கவோ இரங்கவோ காவிரி ஆற்றில் இறங்கி புகைப் படம் எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடியாக உள்ளது.
நீர் இருப்பு 93.47 டி எம்.சி.உள்ளது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் 18,000 கனஅடியில் இருந்து மாலை 6 மணி அளவில் 25,000 கன அடியாக திறக்கப்பட்டுள்ளது.