பறம்பு நோக்கி ஒரு பயணம்! | மனம் கவர்ந்த வேள்பாரி
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
பச்சை மலை தொடரின்
முன்னால் இருக்கும்
வேட்டுவன் பாறை வழியே
செல்வோம்
கபிலரை கைபிடித்து
வழிகாட்டி சென்ற நீலன் போல்
உங்களை அழைத்து செல்கிறேன்
வள்ளி முருகன்
ஆதனி பாரி
மயிலா நீலன்
காதல் கதைகளுக்கு
பஞ்சமில்லா காடு இது
முல்லைக்கு தேர் கொடுத்தது மட்டுமல்ல
பாணர்கள் பலருக்கும் கருணையும் பரிசுப்பொருட்களும்
அள்ளி தந்த இடம் இது

முருகன் எவ்வி
பாரி கபிலர்
நட்பின் கதைகளை
கண்டு கழித்த காடு இது
காக்க விரிச்சி
சுண்டா பூனைகெல்லாம்
கவலை வேண்டாம்
பாரி பார்த்துக்கொள்வான்
காடை பற்றி அறிய
தேக்கன் இருக்கிறார்
கதைகள் பல சொல்ல
பழையன் இருக்கிறார்
காவல் காத்திட
கூழையனும் முடியன்
போன்ற பலரும் உள்ளனர்
கவலையின்றி கடந்திடுவோம்
கள்ளுக்கும் கறி விருந்துக்கும்
பஞ்சமில்லை எந்த கறிக்கு
எந்த கள் பொருந்தும்னு
வகை வகையா விருந்து
வைப்பாங்க
அறுபதாங்கோழி கிடைச்சா
அது தனி விருந்துதான்
இது மட்டும்தானா
காடே அதிரும்
கொற்றவை கூத்தும்
அழிந்து போன
குலங்களின் கதைகளும்
கண்கலங்க வைத்துவிடும்
வேந்தர்களின் வினையால்
அழிந்து போன குலங்களின் வழித்தோன்றல்களுக்கு
அடைக்கலமே நம் பறம்புதான்
வீரம் காதல் நட்பு
கருணை துரோக கதைகள்
பல உலவும் காடுதான்
வாழ்வில் ஒரு முறையேனும்
வந்து பாருங்கள்
எங்கள் பனையின் மகன்
வேள்பாரியின் பறம்பு நாட்டிற்கு
-Nithin
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!