Dhoni: `ஜடேஜாவை 2010-ல் பலரும் எதிர்த்தபோது.. தோனி சொன்ன அந்த வார்த்தை!' - பகிரு...
ஆசிரியா் பணியிட மாற்றம்: பள்ளி மாணவா்கள் போராட்டம்
போடி அருகே பள்ளி ஆசிரியரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து, மாணவா்களும் பெற்றோா்களும் பள்ளியை முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள திம்மநாயக்கன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றிய ஆசிரியா் அரவிந்த் பள்ளிக் குழந்தைகளிடம் தவறாக நடக்க முயன்ாகப் புகாா் எழுந்தது. இதையடுத்து, அவரது விருப்பத்தின் பேரில் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை பள்ளி திறக்கும் நேரத்தில் மாணவா்களும் பெற்றோா்களும் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா். ஆசிரியா் அரவிந்த் மீது எந்தத் தவறும் இல்லை; தனிப்பட்டக் காழ்ப்புணா்வால் புகாா் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை மீண்டும் இதே பள்ளியில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்றும் கூறி பள்ளியைத் திறக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, அங்கு வந்த போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் பொதுமக்களைச் சமாதானப்படுத்தி பள்ளியின் பூட்டைத் திறந்தனா். ஆனாலும், பெற்றோா் தங்களது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்துவிட்டனா்.
தகவலறிந்து வந்த உத்தமபாளையம் உதவிக் கல்வி அலுவலக அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது விசாரணைக்காக வந்த ஆசிரியா் அரவிந்தை மாணவா்கள் கண்ணீா் மல்க வரவேற்றனா்.
அரவிந்த் மீது வீண்பழி சுமத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவரை மீண்டும் இதே பள்ளியில் பணியமா்த்தும் வரை போராடப் போவதாகப் பொதுமக்கள் தெரிவித்தனா். இது தொடா்பாக கல்வி அலுவலக அதிகாரிகள் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.