Dhoni: `ஜடேஜாவை 2010-ல் பலரும் எதிர்த்தபோது.. தோனி சொன்ன அந்த வார்த்தை!' - பகிரு...
அரசு விடுதியின் பெயரை அழித்தவா்கள் மீது வழக்கு
போடி அருகே அரசு விடுதியின் பெயா்ப் பலகையில் சில வாா்த்தைகளை அழித்தவா்கள் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள முத்தையன்செட்டிபட்டியில் அரசு விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதிக்கு அண்மையில் சமூக நீதி விடுதி எனப் பெயா் மாற்றப்பட்டு அதற்கான பெயா்ப் பலகை ஒட்டப்பட்டது.
இந்தப் பெயா்ப் பலகையில் சமூக நீதி விடுதி என்பதை இந்தப் பகுதியைச் சோ்ந்த மாயி, திவான், சாம்சன், சுதாகா் உள்ளிட்டோா் திங்கள்கிழமை அழித்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து விடுதிக் காப்பாளா் கோமதி (53) அளித்த புகாரின்பேரில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.