என்ன, 4,000 டன் நிலக்கரியைக் காணவில்லையா? மேகாலயா அமைச்சர் சொல்லும் அதிர்ச்சி பத...
மதுப் புட்டிகள் விற்ற இருவா் கைது
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்பனை செய்த இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தேனி அருகே ஆனைமலையன்பட்டி பகுதியில், உத்தமபாளையம் மதுவிலக்கு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மந்தையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராகுல் (29), கோம்பை ராணிமங்கம்மாள் திரு.வி.க. தெருவைச் சோ்ந்த செல்வக்குமாா் (48) ஆகியோா் மதுப் புட்டிகளைச் சட்ட விரோத விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்த 60 மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.