செய்திகள் :

Kanimozhi: `தமிழன் கங்கையை வெல்வான்’ - மக்களவையில் அமித் ஷா முன் கர்ஜித்த கனிமொழி

post image

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்ற மக்களவையில் இன்று உரையாற்றினார்.

தனது உரையில் அமித் ஷா, "இன்று, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருப்பது ஜவஹர்லால் நேருவினால் மட்டுமே.

1971-ல், சிம்லா ஒப்பந்தத்தின் போது, காங்கிரஸ் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைப் பற்றி மறந்துவிட்டனர்.

அப்போது அவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை எடுத்திருந்தால், இப்போது அங்குள்ள முகாம்களில் தாக்குதல்களை நடத்த வேண்டியிருந்திருக்காது.” என்று காங்கிரஸையும், நேருவையும் குற்றம்சாட்டினார்.

அமித் ஷா
அமித் ஷா

அவரைத்தொடர்ந்து திமுக எம்.பி கனிமொழி உரையாற்றத் தொடங்கினர். அப்போது கனிமொழி, "வரலாற்றை நீங்கள் மாற்றி எழுதுகிறீர்கள். உங்களால் தமிழ்நாட்டில் பல இளைஞர்கள் மீண்டும் பெரியார், அம்பேத்கரைப் படிக்கிறார்கள்.

உலகெங்கிலும் இருந்து இளைஞர்கள் நேருவைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்.

நீங்கள் என்ன தவறு செய்தாலும் அதற்கு காரணம் நேரு என்கிறீர்கள். அதனால், மாணவர்கள் அவரைப் பற்றி தெரிந்துள்ள விரும்புகிறார்கள்.

நம்முடைய அமைதி சீர்குலைந்துவிட்டது. இந்திய மக்களை நீங்கள் தோற்கடித்துவிட்டீர்கள்.

மத்திய உள்துறை அமைச்சர், எதிர்க்கட்சிகள் மீது பழிபோடுவதிலேயே குறியாக இருக்கிறார்.

அடுத்த 20 ஆண்டுகளுக்கும் நீங்கள் அதே இடத்தில் இருக்கப்போகிறீர்கள் என்று குறிப்பிட்டார்.

ஆனால், அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை. ஜனநாயக நாட்டில் மக்கள்தான் உச்சபட்ச அதிகாரம் கொண்டவர்கள்.

கனிமொழி - திமுக
கனிமொழி - திமுக

ஜனநாயகத்தையும், தேர்தல் முறையையும் நாம் பாதுகாக்க வேண்டும்.

எல்லா தேர்தலுக்கும் முன்பு செய்வதைப்போலவே சமீபத்தில் தமிழ்நாட்டின் பெருமையையும், கலாசாரத்தையும் பிரதமர் புகழ்ந்தார்.

ஆனால், கீழடி கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்நாட்டின் பெருமையைப் பற்றிப் பேச அவர்களுக்கு விருப்பமில்லை.

கங்கைகொண்ட சோழபுரம்... பெயரை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். கங்கையை வென்றவன் அவன்.

தமிழன் கங்கையை வெல்வான். அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

நெல்லை ஆணவக் கொலை: `அலட்சியம்; தனிச்சட்ட கோரிக்கை புறக்கணிப்பு...' - திமுக-வைச் சாடும் பா.ரஞ்சித்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஐடி ஊழியர் கவின், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டின் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் பிரமுகர்களும், இய... மேலும் பார்க்க

சூட்டைக் கிளப்பிய பஹல்காம் விவாதம் `டு' மத்திய அரசைக் கண்டித்த ஓபிஎஸ் - Daily Roundup 29-07-2025

``இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தத்ததை செய்ததாக 26 முறை அமெரிக்க அதிபர் தெரிவித்திருக்கிறார். அதிபர் ட்ரம்ப் பொய் சொல்கிறார். அவர் ஒரு பொய்யர் என்று மட்டும் சொல்லுங்கள் பார்க்கலாம்" என நாடாளும... மேலும் பார்க்க

Edappadiயின் செயல் - டென்ஷனான BJP; கடுகடுக்கும் ADMK நிர்வாகிகள்| Off The Record

எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டிருக்கும் சுற்றுப் பயணத்தில் நடந்த அரசியல், குளறுபடிகள், உட்கட்சி அரசியல் குறித்தும் விவரிக்கிறது இந்த Off The Record. மேலும் பார்க்க

Pakistan Chocolate உடன் பதுங்கியிருந்த Terrorists - Intelligence Failure | Imperfect Show 29.7.2025

* ஆபரேஷன் சிந்தூர்: "இந்தியாவை கோழை நாடாக்கியிருக்கிறீர்கள்" - சு.வெங்கடேசன்* அகழாய்வுப் பணிகளுக்கான நிதியில் 94% பிரதமர் பிறந்த வத்நகரில் பயன்படுத்தப்பட்டுள்ளது -சு.வெங்கடேசன்* “பஹல்காம் தாக்குதல் உள... மேலும் பார்க்க

"ஆணவக் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க.." - வேல்முருகன் கருத்து!

திருநெல்வேலியில், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 28 வயது ஐ.டி ஊழியர் கவின்குமார் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியிருக்கிறது. கொலையாளி சுர்ஜித்தின் தந்தை-த... மேலும் பார்க்க