செய்திகள் :

"ஆணவக் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க.." - வேல்முருகன் கருத்து!

post image

திருநெல்வேலியில், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 28 வயது ஐ.டி ஊழியர் கவின்குமார் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியிருக்கிறது.

கொலையாளி சுர்ஜித்தின் தந்தை-தாய் இருவரும் காவல் உதவி ஆய்வாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இளைஞர்களிடையே நிலவும் சாதிய மனப்பான்மை, தென் மாவட்டங்களில் அதிகரிக்கும் சாதிய கொடூரங்கள், ஆணவக் கொலைக்கான சிறப்புச் சட்டத்தின் அவசியம் என பல்வேறு விவாதங்களை எழுப்பியிருக்கிறது இந்த கொலை சம்பவம்.

கவின் ஆணவக் கொலை
கவின் ஆணவக் கொலை

இது குறித்து தனது கருத்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் பதிவு செய்துள்ளார் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல் முருகன்.

அவரது பதிவில், "நெல்லையில் ஐ.டி. ஊழியர் கவின்குமார் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுடன் பேசிப் பழகியதற்காக சுர்ஜித் என்பவரால் கொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவம், சமூகத்தில் இன்னும் நிலவும் பாகுபாடுகளையும், வன்முறையையும் வெளிப்படுத்துகிறது.

ஆணவக் கொலை

குற்றவாளி சுர்ஜித் மீது கொலை மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கொலைக்குத் தூண்டுதலாக இருந்ததாகக் கூறப்படும் சுர்ஜித்தின் பெற்றோர், காவல் உதவி ஆய்வாளர்களாகப் பணிபுரிந்தவர்கள் என்பதால், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இத்தகைய ஆணவக் கொலைகள் சமூகத்தில் அன்பு, சமத்துவம் மற்றும் நீதியைப் பாதிக்கும் கொடூரச் செயல்களாகும். இவற்றைத் தடுக்க அரசுக் கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதேநேரம், மக்கள் மத்தியில் சாதி, மதப் பாகுபாடுகளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.

கவின்குமாரின் கொலைக்கு நீதி கோரிப் போராடும் அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து, சமூக நல்லிணக்கத்தை வளர்த்து, ஆணவக் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உறுதியேற்போம். சமத்துவமும் நீதியும் நிலவும் சமூகத்தை உருவாக்குவது, நம் அனைவரின் பொறுப்பாகும்." எனக் கூறியுள்ளார்.

சந்திக்க மறுத்த மோடி! - ஆதங்க ஓபிஎஸ்-ன் அடுத்த நகர்வு என்ன?

மதுரை - போடிநாயக்கனூர் ரயில் பாதையின் மின்மயமாக்கல் உள்ளிட்ட திட்டங்களைத் தொடங்கி வைக்க தூத்துக்குடிக்கு வருகை தந்த பிரதமருக்கு, ஓ.பி.எஸ் வரவேற்பு அளிக்க விரும்பி கடிதம் எழுதியிருந்தார். "தூத்துக்குடி... மேலும் பார்க்க

`இந்தியாவின் மீது 20 - 25 சதவிகித பரஸ்பர வரியா?' - ட்ரம்பின் பதில் என்ன?

ஏப்ரல் 9-ம் தேதி அமலுக்கு வரவிருந்த அமெரிக்காவின் பரஸ்பர வரியை, 'ஒப்பந்தம் பேசலாம்' என்று 90 நாள்களுக்கு ஒத்தி வைத்திருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இந்தப் பரஸ்பர வரி வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அம... மேலும் பார்க்க

Pahalgam: இந்திய பணம் டு பாகிஸ்தான் சாக்லேட்; தீவிரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்டவை - வெளியான லிஸ்ட்

ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகள் நேற்று ஜம்மு காஷ்மீரில் ஆபரேஷன் மகாதேவ் என்ற நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக மத்திய உள்து... மேலும் பார்க்க

நெல்லை ஆணவக் கொலை: `அலட்சியம்; தனிச்சட்ட கோரிக்கை புறக்கணிப்பு...' - திமுக-வைச் சாடும் பா.ரஞ்சித்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஐடி ஊழியர் கவின், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டின் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் பிரமுகர்களும், இய... மேலும் பார்க்க

சூட்டைக் கிளப்பிய பஹல்காம் விவாதம் `டு' மத்திய அரசைக் கண்டித்த ஓபிஎஸ் - Daily Roundup 29-07-2025

``இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தத்ததை செய்ததாக 26 முறை அமெரிக்க அதிபர் தெரிவித்திருக்கிறார். அதிபர் ட்ரம்ப் பொய் சொல்கிறார். அவர் ஒரு பொய்யர் என்று மட்டும் சொல்லுங்கள் பார்க்கலாம்" என நாடாளும... மேலும் பார்க்க

Edappadiயின் செயல் - டென்ஷனான BJP; கடுகடுக்கும் ADMK நிர்வாகிகள்| Off The Record

எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டிருக்கும் சுற்றுப் பயணத்தில் நடந்த அரசியல், குளறுபடிகள், உட்கட்சி அரசியல் குறித்தும் விவரிக்கிறது இந்த Off The Record. மேலும் பார்க்க