செய்திகள் :

`மழை வெள்ளம் வந்து’ - காணாமல் போன 4,000 டன் நிலக்கரி குறித்து அமைச்சர் சொன்ன பகீர் பதில்

post image

மேகாலயாவில் உள்ள டியன்கன் மற்றும் ராஜாஜு ஆகிய கிராமங்களில் இருந்த நிலக்கரி குடோனில் 4,000 டன் நிலக்கரியை சேமித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலக்கரி சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது ஆகும். அதனை மாநில அரசு பறிமுதல் செய்து குடோனில் வைத்திருந்தது. ஆனால் அந்த நிலக்கரி இப்போது திடீரென காணாமல் போய் விட்டது. அதை யாராவது திருடிச்சென்றார்களா என்று தெரியவில்லை. அந்த நிலக்கரி திருட்டு போனது தொடர்பாக மாநில உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், நிலக்கரி காணாமல் போனது குறித்து மாநில அரசை கடுமையாக விமர்சனம் செய்தது.

மழை வெள்ளத்தில் நிலக்கரி...

இரு கிராமங்களில் இருந்த நிலக்கரியை யாரோ திருடிச்சென்று இருக்கிறார்கள் என்றும், திருடியவர்களை அடையாளம் காணும் படியும், நிலக்கரியை பாதுகாக்க நியமிக்கப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக மாநில வருவாய்த்துறை அமைச்சர் கைர்மென் ஷில்லாவிடம் கேட்டதற்கு,''மேகாலயாவில் அதிகப்படியான மழை பெய்துள்ளது. இது அனைவருக்கும் தெரியும். எனவே மழை வெள்ளத்தில் நிலக்கரி அடித்து செல்லப்பட்டு இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அந்த நிலக்கரி அண்டை மாநிலமான அஸ்ஸாம் அல்லது பங்களாதேஷ் அடித்துச்செல்லப்பட்டு இருக்கலாம்.

மழையை குற்றம் சாட்ட முடியாது

நிலக்கரி காணாமல் போனதை நியாயப்படுத்தவில்லை. நிலக்கரி மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதா அல்லது திருட்டு போனதா என்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை. என்னால் மழையை குற்றம் சாட்ட முடியாது. நிலக்கரியை மழை வெள்ளம் அடித்து சென்று இருக்கலாம் அல்லது அடித்துச்செல்லாமல் இருக்கலாம். அது பற்றிய தகவல் இல்லை. ஆனால் சட்டவிரோதமாக நிலக்கரியை எடுத்துச்செல்லவோ அல்லது சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தையோ அனுமதிக்க முடியாது'' என்றார்.

கைர்மென்

அமைச்சர் கைர்மென் 4000 டன் நிலக்கரியை அண்டை நாடு மற்றும் அண்டை மாநிலத்திற்கு அடித்து செல்லப்பட்டு இருப்பதாக தெரிவித்திருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னதாக குடோனில் இருந்த நிலக்கரியை ஆய்வு செய்து இருப்பை அரசு உறுதி செய்திருந்தது. 2014ம் ஆண்டு தேசிய பசுமை தீர்ப்பாயம் மேகாலயாவில் நிலக்கரி சுரங்கத்திற்கு தடை விதித்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் கிழக்கு ஜெயந்தியா மலைப்பகுதியில் முதல் முதல் சுரங்கம் செயல்படத்தொடங்கி இருக்கிறது. கிழக்கு ஜெயந்தியா மலைப்பகுதி நிலக்கரி அதிகமுள்ள பகுதியாகும். அமைச்சர் கைர்மென் அப்பகுதியில் இருந்துதான் சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

மராத்தி பேசாதவர்களை அடித்து உதைக்கும் ராஜ் தாக்கரே கட்சி.. நடவடிக்கை எடுக்க அரசு தயங்குவது ஏன்?

மராத்தி பேசாதவர்கள் மீது தாக்குதல்..மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, மகாராஷ்டிராவில் வசிப்பவர்கள் கட்டாயம் மராத்தியில் பேச வேண்டும் என்று கூறி வருகிறார். இதற்காக அவரது கட்சி தொண்டர்கள்... மேலும் பார்க்க

``அதிமுக -பாஜக கூட்டணியில் விஜய், சீமான் இணையலாம்; ஆனால்..'' - பாஜக ராம சீனிவாசன் சொல்வதென்ன?

திண்டுக்கல், நத்தம் சாலையில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, "திண்டுக்கல் மாவட்டம் பெருமாள் கோவில்பட்டியில் இரு தரப்பினரிடையே கடந... மேலும் பார்க்க

``திமுக `பாடி போன லாரி, டயர் போன பேருந்து' வண்டி ஓடாது..'' - ராஜேந்திர பாலாஜி விமர்சனம்

ராஜபாளையத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற சுற்று பயணத்தின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 7 அன்று விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: ``இந்தியை திணித்தால் பள்ளியை இழுத்து மூடுவோம்..'' - ராஜ் தாக்கரே

மகாராஷ்டிராவில் வசிக்கும் வெளிமாநிலத்தவர்கள் கட்டாயம் மராத்தி பேசவேண்டும் என்று மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கூறி வருகிறார். இந்தி பேசுபவர்களை அவரது கட்சியினர் அடித்து உதைத்து வருகி... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் நகராட்சியில் நம்பிக்கை இல்லா தீர்மானம்; உமா மகேஸ்வரி மீண்டும் தோல்வி.. பின்னணி என்ன?

சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவி மீது நம்பிக்கையில்லா தீர்மானம், நீதிமன்ற அறிவுறுத்தலின்படி மீண்டும் மறைமுக வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இதில் 28 உறுப்பினர்கள் கலந்து கொண்டு வாக்கினை பதிவு செய்ததனர். ந... மேலும் பார்க்க

TVK Vijay: ``தவெக விமர்சனம் செய்தாலும், பாஜக விஜயை கெஞ்சுவது ஏன்?'' - மாணிக்கம் தாகூர் கேள்வி

விருதுநகரில் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 மற்றும் 11 வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு `காமராஜர் விருது... மேலும் பார்க்க