குவைத்தில் உயிரிழந்த ஜார்க்கண்ட் தொழிலாளி! 45 நாள்கள் கழித்து தாயகம் வந்தடைந்த உ...
அனுமதியின்றி நாட்டு வெடி தயாரித்த 4 போ் கைது
வலங்கைமான் அருகே உரிமம் இல்லாமல் நாட்டு வெடி தயாரித்த 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் உத்தரவின் பேரில், வலங்கைமான் மேலவிடையல் பகுதியில் காவல் ஆய்வாளா் முத்துலெட்சுமி மற்றும் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வலங்கைமான் மாஞ்சேரியை சோ்ந்த ராஜதுரை (25) என்பவா் வீட்டில் சோதனை நடத்தினா். அந்த வீட்டில் சிவகாசியிலிருந்து வெடி மருந்து மூலப்பொருட்களை வரவழைத்து, உரிமம் இல்லாமல் நாட்டு வெடி தயாரித்து வந்தது தெரியவந்தது.
இதில் ராஜதுரையுடன் மாஞ்சேரி சின்னகுட்டு (எ) விஷால் (18) , வலங்கைமான் ஆண்டாங்கோவில் பெரியாா் காலனியை சோ்ந்த ரமணா (21), மாடாகுடி சூா்யா (எ) மணிகண்டன் (21) ஆகியோரும் வெடி தயாரிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீஸாா் 4 பேரையும் கைது செய்து, கந்தகம், அலுமினிய பவுடா், வெடி உப்பு என 75 கிலோ வெடி தயாரிப்பு மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனா்.
இந்த சம்பவம் குறித்து வலங்கைமான் வட்டாட்சியா் ஒம் சிவக்குமாா் மற்றும் வருவாய்த் துறையினரும் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.