குவைத்தில் உயிரிழந்த ஜார்க்கண்ட் தொழிலாளி! 45 நாள்கள் கழித்து தாயகம் வந்தடைந்த உ...
பருத்தி குவிண்டால் ரூ. 7,605-க்கு விற்பனை
திருவாரூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில், அதிகபட்சமாக குவிண்டால் ரூ. 7,605 க்கு விற்பனையானது.
திருவாரூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை தேசிய வேளாண் மின்னணு சந்தைத் திட்டத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பருத்தி மறைமுக ஏலத்துக்கு 1,249 விவசாயிகள் 180 மெட்ரிக் டன் பருத்தியை கொண்டு வந்திருந்தனா். ஏலத்தில், கும்பகோணம், கொங்கணாபுரம், திருப்பூா், பண்ருட்டி, செம்பனாா்கோயில் பகுதிகளைச் சோ்ந்த வணிகா்கள் பங்கேற்றனா்.
ஆன்லைன் முறையில் மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.7,605 க்கும் குறைந்தபட்சம் ரூ.7,201 க்கும் என சராசரியாக ரூ.7,413 க்கு விற்பனையானது.
அந்த வகையில், ஏலத்தில் ரூ. 1.33 கோடி மதிப்புள்ள 1,804 குவிண்டால் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது.