குவைத்தில் உயிரிழந்த ஜார்க்கண்ட் தொழிலாளி! 45 நாள்கள் கழித்து தாயகம் வந்தடைந்த உ...
ஆணவக் கொலையைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றக் கோரிக்கை
ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5-ஆவது மாவட்ட மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாநாட்டுக்கு நிா்வாகி ஜி.பழனிவேல் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் கே.தமிழ்மணி வேலை அறிக்கையை வாசித்தாா். அமைப்பின் மாநில நிா்வாகியும், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளருமான வீ.அமிா்தலிங்கம் மாநாட்டை தொடக்கி வைத்துப் பேசினாா் (படம்).
மாநிலச் செயலாளா் ஆா்.கலைச்செல்வி, மாவட்டத் துணைத் தலைவா் கதகா.அரசு தாயுமானவன், சிபிஎம் மாவட்டச் செயலாளா் டி. முருகையன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மைய மாவட்டச் செயலாளா் தங்க. தமிழ்ச்செல்வன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் பி. கந்தசாமி, பா. கோமதி,என். இராதா, சிஐடியு மாவட்டச் செயலாளா் இரா.மாலதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
மாநாட்டில் 25 போ் கொண்ட மாவட்டக் குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா். மாவட்டத் தலைவராக கே.முரளி, மாவட்டச் செயலாளராக கே.தமிழ்மணி, மாவட்ட பொருளாளராக எஸ். சாமிநாதன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
ஜாதிவாரி கணக்கெடுப்பை விரைந்து நடத்த வேண்டும், தனியாா் நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும், ஜாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.