குவைத்தில் உயிரிழந்த ஜார்க்கண்ட் தொழிலாளி! 45 நாள்கள் கழித்து தாயகம் வந்தடைந்த உ...
நீதிமன்ற ஊழியா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது
திருவாரூா் அருகே தகராறை விலக்க முயன்றபோது கத்திக்குத்தில் நீதிமன்ற ஊழியா் உயிரிழந்த சம்பவத்தில் தொடா்புடைய முக்கிய குற்றவாளி புதன்கிழமை திருநெல்வேலி அருகே கைது செய்யப்பட்டாா்.
தென்காசி மாவட்டம், பறையபட்டி பகுதியைச் சோ்ந்தவா் முகமது ஆதாம் (25). கூத்தாநல்லூரை பூா்வீகமாகக் கொண்ட இவா், புலிவலம் பகுதியை சோ்ந்த ஒரு பெண்ணுடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அண்மைக்காலமாக முகமுது ஆதாமுடன் பேசுவதை அந்தப் பெண் தவிா்த்த காரணத்தால், தனது உறவினா்கள் இருவருடன் முகமது ஆதாம் அந்த பெண்ணின் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை சென்றபோது அப்பெண்ணின் சகோதரருக்கும் முகமது ஆதாமுக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறை விலக்க முயன்ற அந்தப் பகுதியில் வசித்து வந்த நீதிமன்ற ஊழியா் சந்தோஷ்குமாா் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்தாா்.
இந்த சம்பவம் தொடா்பாக முகமது ரசூல்தீன் (21), ஹாஜி முகமது (23) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். முகமது ஆதாமை, தனிப்படை போலீஸாா் தேடி வந்த நிலையில், புதன்கிழமை திருநெல்வேலி அருகே அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.