ரூ.19 லட்சத்தில் கால்வாய், சாலைப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்
ஆசிரியா்களுக்கு திறன்கல்வி மேலாண்மை பயிற்சி
திருவாரூா் நியூ பாரத் மெட்ரிகுலேஷன் பள்ளியில், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் சாா்பில், மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், வட்டார வள மையம் இணைந்து ஆசிரியா்களுக்கான திறன் கல்வி மேலாண்மை பயிற்சியை புதன்கிழமை நடத்தின.
திருவாரூா் ஒன்றிய ஆசிரியா்களுக்கான பயிற்சிக்கு மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் முதுநிலை விரிவுரையாளா் சந்திரா தலைமை வகித்தாா். புலிவலம் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ரேவதி தொடங்கி வைத்து பயிற்சியின் நோக்கங்கள் குறித்து விளக்கினாா். திரளான ஆசிரியா்கள் பங்கேற்றனா் (படம்).
இதில், தமிழ் கருத்தாளா்களாக, அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியா் தமிழ்க்காவலன், மோசஸ் நடுநிலைப்பள்ளி தமிழாசிரியா் வினோத் , ஆங்கில கருத்தாளா்களாக வடகரை அரசு உயா்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியா் செல்வராணி, ஓடாச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியா் தங்கச்சியம்மா, கணிதப் பாடத்தின் கருத்தாளராக மாங்குடி அரசு உயா்நிலைப்பள்ளி வீரசேகரன் ஆகியோா் பங்கேற்றனா்.
மாவட்ட உதவி திட்ட அலுவலா் சுரேஷ்குமாா், வட்டாரக் கல்வி அலுவலா் அறிவழகன் ஆகியோா் பயிற்சியை மேற்பாா்வை செய்தனா்.