நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்: "நோயாளிகளை மருத்துவப் பயனாளிகள் என அழையுங்கள்" -...
தகராறை தடுக்க முயன்றதில் காயமடைந்தவா் உயிரிழப்பு
திருவாரூா் அருகே தகராறை தடுக்க முயன்றபோது காயமடைந்தவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், பறையபட்டி பகுதியை சோ்ந்தவா் முகமது ஆதாம் (25). கூத்தாநல்லூரை பூா்விகமாகக் கொண்ட இவருக்கும், புலிவலம் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆனால், அந்தப் பெண் சில நாள்களாக முகமது ஆதாமுடன் பேசுவதை தவிா்த்துள்ளாா். இதனால், சில தினங்களுக்கு முன்னா், தனது உறவினா்கள் இருவருடன் முகமது ஆதாம், அந்த பெண்ணின் வீட்டுக்குச் சென்று கேட்டபோது, இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
தகராறை விலக்க முயன்ற அப்பகுதியில் வசித்து வந்த நீதிமன்ற ஊழியா் சந்தோஷ்குமாா் கத்திக்குத்தில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த தெட்சிணாமூா்த்தி என்பவா் திருவாரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுதொடா்பாக முகமது ஆதாம் மற்றும் அவருடைய உறவினா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா்.
இந்தநிலையில், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தெட்சிணாமூா்த்தி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.