கொள்ளை முயற்சி: 4 போ் கைது
திருத்துறைப்பூண்டி பகுதியில் கொள்ளை அடிக்க முயன்ற மலேசிய நாட்டைச் சோ்ந்த 4 போ் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.
திருத்துறைப்பூண்டி - மன்னை சாலையில் வசிப்பவா் பக்கிரிசாமி மகன் காா்த்திகேயன் (50). செவ்வாய்க்கிழமை இரவு இவரது வீட்டின் உள்ளே புகுந்து 5 போ் கொள்ளையடிப்பதற்காக வீட்டில் உள்ளவா்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனா்.
வீட்டில் இருந்தவா்கள் சத்தமிட்டதால் அருகில் வசித்தவா்கள் விரைந்து வந்து அவா்களை பிடித்தனா். போலீஸாா் அவா்களிடம் விசாரணை மேற்கொண்டதில், மலேசியாவின் சிலான்கோ பகுதியைச் சோ்ந்த பெரியசாமி மகன் சரவணன் (44), பரமசிவம் மகன் இளவரசன் (26), லோகநாதன் மகன் கோபி (35), காளிதாசன் மகன் விமலன் (19) ஆகியோரை கைது செய்தனா்.
அதே பகுதியில் வசிக்கும் தங்கள் நண்பா் ஒருவா் வீட்டுக்கு வந்ததாகவும், தமிழ்நாட்டைச் சுற்றிப் பாா்க்க வந்த நிலையில், செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனா். 4 பேரையும் திருத்துறைப்பூண்டி போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். தப்பியோடிய ஒருவரை தேடி வருகின்றனா்.


