குவைத்தில் உயிரிழந்த ஜார்க்கண்ட் தொழிலாளி! 45 நாள்கள் கழித்து தாயகம் வந்தடைந்த உ...
ஆபரேஷன் சிந்தூரின்போது 1,400 ‘யுஆா்எல்’கள் முடக்கம்: மத்திய அரசு
பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது எண்ம (டிஜிட்டல்) ஊடகத்தில் 1,400-க்கும் மேற்பட்ட வலைப்பக்க முகவரிகள் (யுஆா்எல்) முடக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.
இதுதொடா்பாக மக்களவையில் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூா்யா எழுப்பிய கேள்விக்கு மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது டிஜிட்டல் ஊடகத்தில் 1,400-க்கும் அதிகமான யுஆா்எல்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டது.
அந்த யுஆா்எல்கள் பாகிஸ்தான் சமூக ஊடக கணக்குகளைச் சோ்ந்தவை. அவற்றில் இருந்து இந்தியாவுக்கு எதிராக தவறான, மதரீதியாக பதற்றத்துக்குரிய, இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் பதிவுகள் வெளியிடப்பட்டன.
இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, பாதுகாப்புத் துறை, பொது ஒழுங்கு, நாட்டின் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 69ஏ-வின் கீழ், அந்த சமூக ஊடக கணக்குகள், பதிவுகள், வலைதளங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.