செய்திகள் :

நட்பினால் நஷ்டமா? மோடி - டிரம்ப் உறவு குறித்த கணிப்பு உண்மையானது!

post image

உலகளவில் மிக முக்கிய மற்றும் பிரபலமான தலைவராக இருந்துவரும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையேயான வலுவான நட்புறவை உலக மக்களும் சரி, தலைவர்களும் எப்போதும் மெச்சி வந்தனர். அதன் விளைவாகவோ என்னவோ, அவர்கள் இருவரின் உறவில் தற்போது விரிசல் விழுந்தாகிவிட்டது.

ஆனால், இருவரும் நல்ல நட்புறவில் இருந்தபோதே, அது எப்போதும் நிலைக்காது என்று சிலர் கணித்துக் கூறியிருந்தனர். எதிர்பாராதவிதமாகவா என்னவென்று தெரியவில்லை; நடந்தேறி விட்டது.

டிரம்ப்பின் முதல் பதவிக்காலத்தின்போது, அமெரிக்காவின் ஹூஸ்டன் மைதானத்தில் சுமார் 50,000 பேர் கொண்ட ஒரு நிகழ்வில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்காவில் போப்பை தவிர வேறு எந்தவொரு வெளிநாட்டுத் தலைவருக்கும் இவ்வாறான நிகழ்வு நடத்தப்பட்டதில்லை.

அதற்கு அடுத்த ஆண்டே 2020-ல் குஜராத்தில் டிரம்ப் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்றனர்.

கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில், ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்ற டிரம்ப், மோடி தனது நண்பர் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்தான், அமெரிக்க அதிபர் தேர்தலும் வந்துசேர்ந்தது. தான் அதிபரானால், அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை நாடுகடத்துவேன் என்று வாக்குறுதி அளித்தார்.

டிரம்ப்பின் இந்த வாக்குறுதியை வைத்துத்தான், இந்தியா - அமெரிக்கா உறவில் விரிசல் ஏற்படும் என்று தில்லியைச் சேர்ந்த சிந்தனைக் குழு மையம் ஒன்று தெரிவித்தது.

ஏனெனில், இந்தியர்களும் பல்லாயிரக்கணக்கானோர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியுள்ளனர். டிரம்ப்பின் வாக்குறுதிப்படியே, சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களும் கைகளில் விலங்கிடப்பட்டு, கால்கள் கட்டப்பட்டு குறிப்பிடத்தக்க அவமரியாதையுடன் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர். இதன்போது, ஆரம்பித்தது இந்தியா - அமெரிக்கா விரிசல் எனலாம்.

ஆனால், அதன் பின்னர் வரிவிதிப்பு, இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவில் விற்கப்படும் பொருள்கள் மீதான தடை உள்ளிட்டவற்றால் இருநாடுகள் இடையே செழுமையான விரிசல் ஏற்பட்டது.

2023 - 24 நிதியாண்டில் 30 பில்லியன் டாலருடன், அமெரிக்காவின் வர்த்தகத்தில் பெரியளவிலான பங்களிப்பை இந்தியா கொண்டிருந்தது.

இந்த நிலையில்தான், இந்தியா மீதான வரி பிரச்னையைக் கொண்டு, இந்தியாவை `செத்த பொருளாதாரம்’ என்று டிரம்ப் விமர்சித்துள்ளார்.

டிரம்ப்பின் இந்தப் பேச்சுக்கு இந்தியாவின் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தும், அமைதிகாத்துவரும் ஆளும் அரசுக்கு கண்டனமும் தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, டிரம்ப்புடனான மோடியின் நட்புறவால் நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுவதை மறுக்க முடியாது என்றும் சமூக ஊடகங்களில் கருத்துகளும் விமர்சனங்களும் உலவுகின்றன.

வாக்குகளைத் தேர்தல் ஆணையம் திருடுவது தேசத்துரோகம்; 100% ஆதாரங்கள் உள்ளன! - ராகுல்

மக்களின் வாக்குகளை தேர்தல் ஆணையம் திருடுகிறது என்பதற்கான 100% ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக ப... மேலும் பார்க்க

நுரையீரல் புற்றுநோய் நாள் இன்று! தில்லியில் இருந்தால் சிகரெட்டே பிடிக்க வேண்டாம்!!

புது தில்லி: நுரையீரல் புற்றுநோய் நாள் ஆகஸ்ட் ஒன்றாம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இன்றைய நாளில் நுரையீரல் புற்றுநோய் வராமல் தற்காத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படும்.இந்த நாளில், ஆசிய... மேலும் பார்க்க

செப். 9 குடியரசு துணைத் தலைவர் தேர்தல்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.நாட்டின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவரான ஜகதீப் தன்கா் ஜூலை 2... மேலும் பார்க்க

எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற மாநிலங்களவை இன்று(வெள்ளிக்கிழமை) நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.... மேலும் பார்க்க

செய்யறிவால் பறிபோகும் வேலை வாய்ப்புகளின் பட்டியல்! மைக்ரோசாஃப்ட் ஆய்வு

செய்யறிவு என்பது, ஏதோ ஓரிடத்தில் இருந்துகொண்டு நமக்காக வேலை செய்யும், நம் வேலையை எளிதாக்கும் என்று மனிதர்கள் நினைத்திருந்த நிலையில், நம் வேலையையே அழித்தொழித்துவிடும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்ட... மேலும் பார்க்க

அனில் அம்பானி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்!

தொழிலதிபர் அனில் அம்பானி நேரில் ஆஜராவதற்கு அழைப்பு விடுத்து அமலாக்கத்துறை வெள்ளிக்கிழமை சம்மன் அனுப்பியுள்ளது.யெஸ் வங்கியிடமிருந்து கடன் பெற்று ரூ.3,000 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும்... மேலும் பார்க்க