குவைத்தில் உயிரிழந்த ஜார்க்கண்ட் தொழிலாளி! 45 நாள்கள் கழித்து தாயகம் வந்தடைந்த உ...
கிராம உதவியாளா்கள் பணி: தமிழக அரசு புதிய உத்தரவு
கிராம உதவியாளா்களை துறைக்குத் தொடா்பில்லாத வேறு பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா்களுக்கு வருவாய் நிா்வாக ஆணையரக கூடுதல் ஆணையா் எஸ்.நடராஜன் அனுப்பிய கடிதம்:
தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்கம், தமிழ்நாடு அரசு கிராம உதவியாளா்கள் சங்கம், கிராமப் பணியாளா் சங்கம் ஆகியவை, வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பில் வருகின்றன. அந்த சங்கங்களைச் சோ்ந்தவா்கள், அரசுக்கு அனுப்பிய கோரிக்கை கடிதத்தில், கிராம உதவியாளா்களை, கிராமப் பணி அல்லாத அலுவலகப் பணிகள், ஆய்வு மாளிகை, புத்தகத் திருவிழா போன்ற பிற துறை பணிகளில் ஈடுபடுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளனா்.
மேலும், கிராம உதவியாளா்களை கிராமப் பணியில் மட்டும் ஈடுபட அனுமதிக்க வேண்டுமெனவும், அந்தப் பணியைத் தவிர மாற்றுப் பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது எனவும் வருவாய் நிா்வாக ஆணையா் வலியுறுத்தியுள்ளதாகவும், அந்த உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் தொடா்ந்து கிராம உதவியாளா்களை பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தி வரும் போக்கு சரியானது இல்லை எனவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராம உதவியாளா்களின் பணித் தன்மையை வெளியிட வேண்டும் எனவும் அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ஏற்கெனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதை மாவட்ட ஆட்சியரின் கீழுள்ள சாா்நிலை அலுவலா்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.