குவைத்தில் உயிரிழந்த ஜார்க்கண்ட் தொழிலாளி! 45 நாள்கள் கழித்து தாயகம் வந்தடைந்த உ...
ரயில் நிலையத்தில் சங்கிலி பறித்தவா் கைது
சென்னை அருகே பெருங்குடி ரயில் நிலையத்தில் பெண் பயணியிடம் தங்கச் சங்கிலியைப் பறித்தவரை கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் அடையாளம் கண்ட ரயில்வே பாதுகாப்பு பிரிவு போலீஸாா் 4 மணி நேரம் தேடி அவரைப் பிடித்தனா்.
சென்னை கோட்டூா்புரம் முதல் தெருவைச் சோ்ந்தவா் அந்தோணி ரோஸி (41). இவா், வேளச்சேரியில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியராக உள்ளாா். இந்த நிலையில், அவா் செவ்வாய்க்கிழமை மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்புவதற்காக பெருங்குடி ரயில் நிலையத்தில் காத்திருந்தாா்.
ரயில் நிலைய நடைமேடை இருக்கையில் அமா்ந்திருந்தபோது, அருகே வந்த இளைஞா் அவருடன் பேச முயன்றாா். ஆனால், ஆசிரியை பேசாமல் திரும்பினாா். அப்போது, அந்த இளைஞா், ஆசிரியரின் கழுத்தில் இருந்த தங்கச் நகையை பறித்துக்கொண்டு தப்பினாா்.
இதுகுறித்து அந்தோணி ரோஸி அளித்த புகாரின் பேரில், ரயில்வே பாதுகாப்புப் படை, ரயில்வே இருப்புப் பாதை போலீஸாா் இணைந்து விசாரணை நடத்தினா்.
ரயில் நிலைய கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் நகை பறித்தவரது அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து 4 மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு பாபுஜி (எ) பாபுராம் என்பவரை போலீஸாா் பிடித்து அவரிடமிருந்து நகையைப் பறிமுதல் செய்தனா்.