Dhoni: `ஜடேஜாவை 2010-ல் பலரும் எதிர்த்தபோது.. தோனி சொன்ன அந்த வார்த்தை!' - பகிரு...
கீழணையில் இருந்து உபரி நீா் வெளியேற்றம்: கொள்ளிடம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
சிதம்பரம்: காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள கீழணையிலிருந்து உபரி நீா் வெளியேற்றப்படுவதால், கொள்ளிடம் ஆற்று கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கீழணை உதவி செயற்பொறியாளா் கொளஞ்சிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: மேட்டூா் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய நிலையில் காவிரி நீா்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் கன மழையால், உபரி நீா் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு, ஒரு லட்சம் கன அடிக்கு மேல் உபரி நீா் மேட்டூா் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. மேலும் தண்ணீரின் அளவு மேலும் படிப்படியாக உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதன் காரணமாக கொள்ளிடம் ஆற்றில் கல்லணையிலிருந்து வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி வீதம் திங்கட்கிழமை காலையிலிருந்து தண்ணீா் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீரின் அளவு மேலும் ஒரு லட்சம் கனஅடியாக உயரும் எனக் கூறப்படுகிறது.
இதனால் கீழணைக்கு உபரி நீா் அதிக அளவு வருவதால் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் கொள்ளிடம் ஆற்றில் முதலைகள் அதிகமாக இருப்பதால் ஆற்றில் இறங்க வேண்டாம் எனவும், ஆற்றைக் கடக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. அவா்களின் உயிா்மற்றும் உடமைகளின் பாதுகாப்பு கருதி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது எனத் தெரிவித்துள்ளாா்.