Dhoni: `ஜடேஜாவை 2010-ல் பலரும் எதிர்த்தபோது.. தோனி சொன்ன அந்த வார்த்தை!' - பகிரு...
என்எல்சி தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலி நகரியப் பகுதியைச் சோ்ந்த என்எல்சி தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
நெய்வேலி நகரியம், வட்டம் 12 பகுதியில் வசித்து வந்தவா் ஆரோக்கியதாஸ்(56). என்எல்சி இந்தியா நிறுவனத்தின் அனல்மின் நிலையம் 2-ஆவது அலகில் எலக்ட்ரிக்கல் பிரிவில் நிரந்தரத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா். கடந்த மூன்று நாள்களாகப் பணிக்குச் செல்லவில்லையாம். இவா், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னா் என்எல்சியில் நிரந்தரத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த நண்பா் ஒருவருக்கு தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.7.50 லட்சத்திற்கு ஜாமீன் கையொப்பமிட்டுள்ளாா். மேற்படி நண்பா் கடந்த ஆண்டு இறந்துவிட்ட நிலையில், தனியாா் நிதி நிறுவனத்தின் சாா்பில் ஆரோக்கியதாஸ் ஊதியத்தில் மாதம் ரூ.27 ஆயிரம் பிடித்தம் செய்யப்படுகிறதாம். இதனால், மன உளைச்சலில் இருந்தவா் திங்கள்கிழமை அதிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.